புறஜாதி யுகத்தின் துவக்கமும் முடிவும் Jeffersonville, Indiana, USA 55-0109E 1மாலை வணக்கம் நண்பர்களே, இந்த இரவில் இங்கே மறுபடியும் இருப்பதில் மிகவும் நன்றியுடையவனாயிருக்கிறேன். கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் இங்கிருந்து கிளம்பினேன் 4 மணி வாக்கில் வெளியே கிளம்பினேன் என்று நான் நினைக்கிறேன், பின்னர் நான்... சில நண்பர்களை நாங்கள் காணச் சென்று, பின்னர் திரும்பி வர இருந்ததால், ஏழு மணி ஐந்து நிமிட நேரத்திற்கு திரும்பி வந்தோம். எனவே, சகோதரன் நெவில், நானே செய்திக்கான ஒரு பொருளைத் தேட வேண்டிய நிலையில் இருக்கிறேன். 2இப்பொழுது ஒரு அன்பான நபர் மூன்று வாரத்திற்கு முன்னர் விபத்துக்குள்ளாகி சுயநினைவற்று இருக்கிறார் என்று டென்னஸியிலிருக்கும், சாட்டநூகாவிலிருந்து யாரோ ஒருவர் தொலைபேசியில் அழைத்து விண்ணப்பத்தை கொடுத்திருக்கிறார். சபையார் ஜெபிக்கும்படிக்கு விண்ணப்பத்தை கொடுத்திருக்கிறார். (சகோதரன் நெவில், 'சகோதரன் பில்“, என்று அழைக்கிறார்.) கூறுங்கள். (நான் ஒரு அறிவிப்பை அறிவிக்கட்டுமா?) நிச்சயமாக, நீங்கள் அறிவிக்கலாம், சகோதரன் நெவில். (சகோதரன் நெவில் பேசுகிறார்). 3மெல்கிசேதேக்கு பற்றியும், அவர் யார் என்றும் நாம் கடந்த முறை பேசிக் கொண்டிருந்தோம். மேலும் நாம்... அதை நாம் முழுமையாக முடித்ததாக தெரியவில்லை, எனவே அடுத்தமுறை நாம் வரும்போது, எபிரேய புத்தகத்திலிருந்து தொடர்ந்து பார்ப்போம். ஆனால் இன்று இரவு தானியேலின் புத்தகத்திற்கு நாம் திருப்புவோம். வேதாகமம் வைத்திருக்கும் நீங்கள் தானியேல் 12-ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். நாம் அதிலிருந்து சிறிது வாசித்து, தானியேலின் புத்தகத்திலிருந்து சில தேவ வார்த்தைகளை எடுத்துப் பேசுவோம். 4நேபுகாத்நேச்சாரால் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, தானியேலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனாக ஜெருசலத்திலிருந்து பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டவனாக இருந்தான். அவன் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவன் ஒரு வாலிப நபராக இருந்தான்,... பெற்றிருந்த அநேகர் அங்கே இல்லை, இருப்பினும் அவன் அந்த மகத்தான ஆதி விசுவாசத்தை பற்றிக் கொண்டிருந்தான். நான் தானியேலை நேசிக்கிறேன். ஏனெனில், அவன் பாபிலோனுக்கு சென்ற பிறகும் தான் ஒரு விசுவாசியாகவே இருப்பேன் என்று தன் இருதயத்தில் அவன் தீர்மானித்துக் கொண்டான். மேலும் அவன் இராஜா கொடுக்கும் மாமிச போஜனம் இன்னும் அது போன்றவைகளோடு தன்னை கறைப்படுத்திக் கொள்ளப்போவதில்லை என்று தீர்மானித்திருந்தான். இப்பொழுது, உண்மை என்னவெனில்... தானியேல் புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாய் இருந்தான். தானியேல் முழு புறஜாதிகளின் காலத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் கண்டான். அவன்தான் முதல் நபராக... அவன் புறஜாதிகளின் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்டான். அவன் புறஜாதியான் அல்ல, ஆனால் அவன் புறஜாதியின் யுகத்தை துவக்கம் முதல் முடிவுவரை, அதாவது பொன்னாலான தலையில் துவங்கி, இரும்பும் களிமண்ணுமான பாதத்தில் முடிவடைகிறதை கண்டான். அதற்குபிறகு அங்கே அவன் இராஜா கொடுக்கும் மாமிச போஜனம் மற்றும் இராஜாவின் இதர காரியங்களிலும் தீட்டுப்படுத்திக் கொள்ளப்போவதில்லை என்று தன் இருதயத்தில் தீர்மானித்துக் கொண்டான். 5மேலும் அங்கே அவனோடு இன்னொரு சகோதரர்களின் கூட்டத்தை கொண்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ இருந்தனர், அவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல, ஆனால் விசுவாசிகளாய் இருந்தனர். அவர்களும் கூட தங்கள் இருதயங்களில் அவ்விதமே தீர்மானித்திருந்தனர். மேலும் இந்த நான்கு பேரும் ஒன்றாக கூடிவந்த போது, நாம் செய்வது போன்று அவர்கள் ஜெப கூட்டத்தை கொண்டிருப்பார்கள் என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. நமக்கு காரியங்கள் பொதுவாக இருக்கிறது. நாம் ஒன்றாக கூடி வருவதுண்டு. 'ஒரே சிறகுள்ள பறவைகள் ஒரே இடத்தில் கூடும்“ என்று ஒரு பழமொழி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். மற்றும் அது... ஒரு பழமொழி, சொல்லப்போனால் அது ஒரு அருமையான காரியமாய்க் கூட இருக்கிறது. 'ஒரே சிறகுள்ள பறவைகள் ஒரே இடத்தில் கூடும்”. அதற்காக நீங்கள் சந்தோஷமாக இல்லையா? நிச்சயம். 'ஒரே சிறகுள்ள பறவைகள் ஒரே இடத்தில் கூடும்“. 6கொஞ்ச நாட்களுக்கு முன் நான் ஒரு கூட்டத்தில் இருந்தேன். அங்கே ஒரு மனிதன் ஒரு காரியத்தை குறித்து சம்பாஷித்துக் கொண்டிருந்தான். அவர், 'நல்லது...“ என்று கூறினார். இயேசு தன்னுடைய மரணத்திற்கு பிறகு சிறைச்சாலைக்கு சென்று... ஆத்துமாக்களிடத்தில், அவர்களிடத்தில் பிரசங்கித்ததை குறித்து பேசிக் கொண்டிருந்தார். எனவே அதைக் குறித்து பேசிக் கொண்டிருந்த இந்த மனிதன், 'சரி, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”, என்றார். அதற்கு வெள்ளையர் அல்லாத ஒரு சகோதரன் எழும்பி, 'ஆம், அவர் அங்கே சென்று, காவலில் உள்ள ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார் என்று அவ்விதமாகத்தான் வேதாகமம் கூறுகிறது“, என்றார். அவர், 'அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்“, என்றார். அதற்கு இவர், 'வேதாகமம் கூறுகிறபடி, அவை பேழை உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த, மிகவும் பொறுமையான நோவாவின் நாட்களில் மனந்திரும்பாத ஆத்துமாக்கள்“, என்றார். அதற்கு அவர், 'இல்லை, அதுதாமே ஸ்தாபனங்களிலும் இன்னும் ஒவ்வொன்றிலுமிருந்து, அதாவது சிறையிருப்பிலிருந்து வெளிவரும்படிக்கு இந்த பெந்தெகொஸ்தே மக்களுக்கு பிரசங்கிக்கும் இந்த சபையாக இருக்கிறது“, என்றார். அதற்கு இவர், 'இப்பொழுது, இங்கே கவனியுங்கள், சகோதரனே, இங்கே பெந்தெகொஸ்தே குறித்து குறிப்பிடபட வில்லை“, என்றார். மேலும் இவர், 'அவர் சென்று, சிறையிலிருக்கும் ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார் என்று மட்டுமே கூறியிருக்கிறது”, என்றார். அதற்கு நானும், 'ஆமென், அது சரியே“, என்றேன். அப்பொழுது இந்த ஊழியர் என்னை திரும்பிப் பார்த்து, 'ஒரே சிறகுள்ள பறவைகள் ஒரே இடத்தில் கூடும்“, என்றார். நானும், 'அது சரிதான். வேத வார்த்தை என்ன கூறுகிறதோ, அதை உண்மை என்று விசுவாசிக்கும் ஒரே விதமான விலையேறப்பெற்ற விசுவாசத்தை கொண்டிருக்கும் சகோதரர்கள்“, என்றேன். 7அவ்விதமான விசுவாசத்தை கொண்ட மூன்று நண்பர்கள் தானியேலுடன் இருந்தார்கள். எனவே நீங்கள் உங்கள் தேசத்தை விட்டு வெளியில் இருக்கும்போது, உங்களோடு கூட இருக்கவும், உங்களோடு கூட நிற்கும்படிக்கு இருக்கும் ஒரு நல்ல அசலான நண்பனை கண்டுபிடிக்கும்போது, அது அருமையாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். ஓ, என்னே‚ அந்நிய தேசங்களில் உங்களுக்கு நண்பனாக இருக்கவும், உங்களை நேசிக்கக்கூடிய, உங்களோடு கூட நிற்கக்கூடிய ஒருவரை, குறிப்பாக ஒரு அந்நியரை நீங்கள் கண்டுபிடிக்கும் போது, அது மிகவும் விலையேறப்பெற்றதாய் இருக்கும். எனவே இந்த சகோதரர்கள் தங்கள் பட்டணத்திலிருந்து சிறைபிடித்து செல்லப்பட்டார்கள். அவர்களுடைய பட்டணமானது எரிக்கப்பட்டு, அவர்களுடைய எல்லா பாத்திரங்களும் மற்றும் தேவனுடைய பரிசுத்தமான பொருட்களும், பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நேபுகாத்நேச்சாரின், இராஜாவின் பொக்கிஷ சாலையில் வைக்கப்பட்டது, அதைக் கொண்டு சென்ற... இப்பொழுது, அவர் ஒரு பெரிய, புறஜாதி இராஜாவாக இருந்தார். 8எனவே, அவர்களுடைய பட்டணமானது எரிக்கப்படும்படிக்கு, அவர்களுடைய சபை எரிக்கப்படும் படிக்கும் செய்து, அவர்களை அந்த பட்டணத்திற்கு சிறைபிடித்து கொண்டு செல்ல தேவன் அனுமதித்திருப் பாரானால், அதற்கு காரணம் அவர்கள் தேவனை விட்டு விலகி சென்றதுதான். இருப்பினும் அவர் ஒரு விசுவாசியை அங்கே கொண்டிருந்தார், அதினிமித்தம் அவர் தன்னுடைய கரங்களை அவன் மேல் போட்டு, 'இவன் என்னுடைய தாசன்“, என்று சொல்லத்தக்கதாக எவ்விடத்திலும் தேவன் தனக்கென்று ஒரு சாட்சியை கொண்டிருந்தார். அவர் தனக்கென்று ஒரு சாட்சி இல்லாமல் இருக்கவில்லை. சில சமயங்களில் அது ஒரே ஒரு நபராக இருக்கக் கூடியதாக இருந்தாலும், அவன் மேல் தன் கரங்களை போட்டு, 'இவன் என்னுடைய தாசன், நான் சொல்லுகிறபடியெல்லாம் இவன் செய்வான்”, என்று சொல்லத்தக்க, யாராவது ஒரு நபரை அவர் எப்பொழுதும் கொண்டிருப்பார். இப்பொழுது, இதை நாம் நேசிக்கிறோம். 9எனவே கவனிப்போமானால், இந்த சகோதரர்கள் அங்கே இருக்கும்போது அவர்கள் பரீட்சைக்குள்ளாக போடப்பட்டார்கள். இது ஒரு உண்மையான விசுவாசிக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டாய் இருக்கிறது. எப்படியெனில் ஒருவன் உண்மையிலேயே கர்த்தராகிய இயேசுவை தன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் வரும்போது, அவன் எப்பொழுதும் பரீட்சைக்குள்ளாக போடப்படுகிறான். சாத்தான், இன்னமும் அவன் பரீட்சிக்கிற (சோதிக்கிற) வேலையில் இருக்கிறான். அது உங்களுக்கு நன்மை செய்யும்படிக்கே வருகிறது. அது உங்களுடைய நன்மைக்கே. 'தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு குமாரனும் பரீட்சிக்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, தண்டிக்கப்படுகிறான்“, வேறு வார்த்தையில் கூறுவோமானால், ஒரு சிறிய அடிகொடுத்து, நேராக்கப்படுகிறான். எனவே தேவன் நமக்கு சில சிட்சைகளை கொடுக்கும்போது, அதற்கு நாம் நிற்காத பட்சத்தில் நாம் தேவனுடைய பிள்ளைகளாக இராமல், வேசியின் பிள்ளைகளாக இருப்போம். எனவே, பரலோகத்தை நோக்கி உண்மையிலேயே தன் விசுவாசத்தை வைத்த ஒரு மனிதன், இங்கே பூமியின் மேல் என்னதான் நடந்தாலும், இன்னுமாக அவன் தன் விசுவாசத்தை பரலோகத்தை நோக்கியே வைத்திருப்பான். அவனுடைய நண்பர்கள் அவனை கைவிடலாம், அவனுடைய குடும்பம் அவனை கைவிடலாம், அவனுடைய மேய்ப்பரும் அவனை கைவிடலாம்; ஆனால் கைவிடாத ஒருவர் இருக்கிறார், அந்த ஒருவர் தேவனே. அவ்விதமாக உங்கள் சிந்தை இருக்குமானால், அதை நான் நேசிக்கிறேன். 10தானியேல் தான் திரும்பிப் போகக் கூடிய எல்லா வாய்ப்புகளையும் வேண்டுமென்றே நிராகரித்து போட்டான். அவன் திரும்பிப்போக வேண்டும் என்ற திட்டத்தை ஒரு போதும் கொண்டிருக்கவில்லை. அவன் தான் திரும்பி வந்த பாதையை கவனிக்காமல், அவன் நோக்கி... கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளை மறந்து, உன்னத அழைப்பின் இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் தொடர்ந்து சென்றான். அதைதான் நாம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அதைத்தான் சபையும் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. நான் கவனித்துக் கொண்டிருந்தபோது, அவனை சோதிக்கும்படிக்கு தேவன் பிசாசை அனுமதித்தார். எனவே, ஓ, அவர்கள், அவர்களை அக்கினியால் சோதித்தார்கள். அவர்கள் அவனை சிங்ககெபியில் போட்டு சோதித்தார்கள். ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் தேவன் அவர்களை மேலான ஜெயத்தினால் விடுவித்தார். 'நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், ஆனால் தேவன் அவைகளெல்லாவற்றிலுமிருந்து அவனை விடுவிப்பார்;“. அது எவ்வளவு அற்புதமாக உள்ளது அல்லவா‚ அதை நாம் எவ்வளவாக பாராட்டுகிறோம்‚ சோதனைகளும் உபத்திரவங்களும், பரீட்சைகளும் இவையாவும் நம்முடைய நன்மைக்கே கிரியை செய்கிறது. அதற்குபிறகு தேவன் உன்னை நோக்கிப் பார்த்து, உன் மீது தன் நம்பிக்கையை வைப்பார். அதன்பிறகு தேவன் உனக்கு பெரிய காரியங்களைச் செய்வார். 11அந்நிய தேசத்தில் தானியேலை தேவன் உபயோகித்தார். அவன் தன் சொந்த ஜனத்தண்டையிலிருந்து பிரிந்திருந்தாலும், தன் சொந்த பட்டணத்தை விட்டு பிரிந்திருந்தாலும், தன் சொந்த சபையிலிருந்து பிரிந்திருந்தாலும், அவன் இன்னுமாக தேவனுடைய கரத்தில் ஒரு கருவியாக இருந்தான். எனவே, ஒரு வேளை உங்களால் எதையாகிலும் விட்டு நீங்கள் தூரமாயிருந்தாலும், உங்களுக்கு பிரியமானவர்கள் எல்லாரிடத்திலுமிருந்து நீங்கள்; தூரமாயிருந்தாலும், அல்லது நீங்கள் உங்கள் சபையிலிருந்து தூரமாயிருந்தாலும், நீங்கள் இன்னுமாக தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக இருக்கமுடியும். தேவன் உங்களை ஒரு சாட்சியாக பயன்படுத்தலாம் அல்லது அவர் விரும்புகிறபடி உங்களை வேறெதற்காகவும் பயன்படுத்தலாம். 12அருமையான எடுத்துக்காட்டுகள், நீங்கள் எங்கு திரும்பினாலும் வேதாகமம் அப்படிப்பட்ட காரியங்களால் நிரம்பி வழிந்தோடுகிறதாய் இருக்கிறது. வார்த்தையை வாசிப்பதற்கு நீங்கள் விரும்பவில்லையா, ஓ, சில சமயங்களில் அதைப் படித்து, நான் அழுவதுண்டு. இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நான் ஒரு அறையில் (வேதாகமத்தை) படித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுது நான் வெறுமனே உட்கார்ந்து, ஒரு குழந்தையைப் போல அழவேண்டும் போலிருந்தது. எனவே நான் எழுந்து நின்று, என்னுடைய நாற்காலியை சுற்றிவந்து, என்னுடைய கரத்தை என் நாற்;காலியின் மேல் வைத்து, மறுபடியும் என் வேதாகமத்தை நோக்கினபோது, நான் அழத்தொடங்கினேன், பின்னர் நான் மறுபடியும் என் நாற்காலியை சுற்றிவந்து, அதை மறுபடியும் நோக்கிப் பார்த்தேன். ஓ, தேவனே, அதில் தைரியமாக தன் நம்பிக்கையை வைத்து, விசுவாசிக்கிற ஒவ்வொரு மனுஷனுக்கும் அல்லது மனுஷிக்கும் அதில் நித்திய ஜீவன் உண்டு - நித்திய ஜீவன். அதினால் தான் அவர், 'வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; நீங்கள் நினைக்கிறபடி அவைகளில் நித்திய ஜீவன் உண்டு, என்னைக் குறித்து சாட்சியிடுகிறவைகளும் அவைகளே'', என்று கூறியிருக்கிறார். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். நாம்தாமே... வேதாகமமானது நம்முடைய பாதைக்கு விளக்காயிருந்து நாம் அதினால் வழிநடத்தப்படுவோமானால், அது நாம் போகிற பாதையை பின்தொடர்ந்து நம்மை வெற்றியின் மேல் வெற்றியை பெற்றுக் கொள்ளத்தக்கதாக வழிநடத்துகிறதாயிருக்கிறது. 13எனவே நீங்கள் வெற்றியை பெற்றுக் கொள்வதற்கு முன் யுத்தம் என்று ஒன்று இருந்தாக வேண்டும். யுத்தங்கள் இல்லாத பட்சத்தில், வெற்றிகளும் இருக்காது. எனவே நாம் யுத்தங்களுக்காகவும், சோதனைகளுக்காகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அது நாம் வெற்றிகளை பெற்றுக் கொள்ளும்படிக்கு, தேவன் நமக்கு கொடுக்கும் தருணங்களாக இருக்கிறது. ஓ, என்னே, அது உங்களை கொஞ்சம் உற்சாகப்படுத்தவில்லையா? பாருங்கள், உங்களுக்கு எதிராக யுத்தம் ஏற்படுகிறது, யாரோ ஒருவர் உங்களை குறித்து தவறாக பேசுகிறார்; வியாதி உங்களுக்கு வருகிறது, ஏனெனில் தேவன் உன்னை சுகப்படுத்தும்படிக்கும், உனக்கு தன்னுடைய தயவை காண்பிக்கும்படிக்கும், மேலும் அதின்மூலம் அவர் என்ன தெரிவிக்கிறார் என்பதை நீ பார்க்கும்படிக்கும் அந்த இலகுவான துன்பங்களை தேவன் உனக்கு கொடுக்கிறார். ஏனெனில் அவர் உன்னை நேசிக்கிறார். 14பரிசுத்த பூமியாகிய ஜெருசலத்தில் ஒரு பழைய மேய்ப்பனின் கதையானது சொல்லப்பட்டு வந்தது, அக்கதையில் (மேய்ப்பனிடத்தில்) ஒருவர், 'ஏன் நீ அதை தூக்கி செல்கிறாய்?“, என்பான். அதற்கு அவர், 'அதற்கு கால் உடைந்து போய் இருக்கிறது”, என்பார். இவன், 'அதற்கு எப்படி இது ஏற்பட்டது, செங்குத்தான பாதையிலிருந்து விழுந்துவிட்டதா?“, என்பான். அவர், 'இல்லை, நான் அதின் காலை உடைத்துவிட்டேன்”, என்பார். இவன், 'சரி, நீ அந்த செம்மறியாட்டின் காலை உடைத்ததால் நீ ஒரு கொடூரமான மேய்ப்பன்'', என்றான். இவர், 'இல்லை, அதை நான் நேசிக்கிறேன்'', என்பார். மேலும் இவர், 'அது வழிவிலகி சென்றது, அது என்னை கவனிக்கும்படி என்னால் அதற்குச் செய்ய முடியவில்லை, எனவே நான் அதின் காலை உடைத்துப் போட்டேன், அப்பொழுது என்னால் அதற்கு இன்னும் அதிக கவனம் செலுத்த முடிந்தது. அப்பொழுது அது இன்னும் என்னை நேசித்து, என்னை பின்பற்றும்'', என்பார். 15தேவன் நம்மீது இன்னும் அதிக கவனத்தை செலுத்தும்படிக்கும், அவருடைய மடியில் நம்மை கொண்டு வரும்படிக்கும், மருத்துவர் இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறும்போது நம்மை அவருடைய மார்பில் அணைத்துக் கொள்ளும்படிக்கும் சில சமயங்களில் நம்முடைய ஆரோக்கியத்தில் நமக்கு கொஞ்சம் சீர்குலைவு ஏற்படும்படிக்கு நம்மை விட்டுவிடுவார். அதற்கு பிறகு நம்மை அவர் தன் மார்பில் அணைத்து, 'நான் உன்னை நேசிக்கிறேன். நான் உன்னை சுகமாக்கும்படிக்கு செய்யப் போகிறேன்'', என்பார். பாருங்கள். ஓ, அது வாழ்க்கையை இன்னும் சிறப்பாக மாற்றாதா? ஓ, அவர் அவ்வளவு மகத்தானவர். அவர் அற்புதமான மேய்ப்பர். அப்படியில்லையா? 'கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். எப்படியாக அவர் நம்மை அமர்ந்த தண்ணீரண்டை வழிநடத்தி, நம்முடைய ஆத்துமாவை மீட்டு, நம்முடைய பாத்திரம் நிரம்பி வழியும்படி செய்து, நம்முடைய சத்துருக்களுக்கு முன்னிலையில் நம்மை அபிஷேகம் பண்ணுகிறார்'', என்று தாவீது சொல்வதில் ஆச்சரியமில்லையே. நீங்கள் எப்பொழுதாவது உங்களுடைய சத்துருக்கள் முன்னிலையில் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்களா? வெறுமனே சாட்சி கூறுவதற்கே உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும், உங்களுக்கு தெரியுமா? உங்களுடைய சத்துருக்கள் முன்னிலையில் நீங்கள் அபிஷேகம் பண்ணப்படுவது என்பது எவ்வளவு அருமையானதாய் இருக்கும். 16இப்பொழுது கவனியுங்கள், பின்னர் தேவன் நேபுகாத்நேச்சரை எடுத்து, அவனை தன்னுடைய கரத்தில் ஒரு கருவியாக பயன்படுத்தினார். அவன் வெளியில் வளர்ந்த புல்லை மேய்ந்தும், அவனுடைய தலைமயிர் கழுகின் இறகுகளைப் போல் வளர்ந்தும், அவனுடைய விரல் நகங்கள் கழுகின் நகங்களைப் போல் வளர்ந்தும், இன்னும் அதுபோன்ற காரியங்கள் அவனுக்கு நிகழ்ந்த பின், உண்மையான இராஜா யார் என்பதை அவன் மரிக்கும்போது அறிந்து கொள்ளும்படிக்கு தேவன் அவனுக்கு அப்படி செய்தார். அவனுடைய மரணத்துக்கு பின், அவனுடைய பேரன் பெல்ஷாத்சார் இராஜாவானான். ஆனால் அவன் நேபுகாத்நேச்சாரைப் பார்க்கிலும் மிகவும் துன்மார்க்கனாய் இருந்தான். அங்கே ஒரு இரவு அவர்கள் ஒரு பெரிய பிரமாண்டமான விழாவை நடத்தினார்கள். அவர்களுடைய எல்லா நீதிபதிகளையும், எல்லா அதிகாரிகளையும் அங்கே நடக்கும் பெரிய, பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். எனவே அவர்கள் இந்த கொண்டாட்டத்தில் இருந்தபோது, அவர்கள் சென்று தேவனை கேலி செய்யும்படிக்கு, பாத்திரங்களை, தேவனுடைய பரிசுத்த பாத்திரங்களை கொண்டுவரும்படிக்குச் செய்தார்கள். தங்களுடைய தேவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எல்லோருமாக சேர்ந்து பாத்திரங்களை உயர்த்தி, கர்த்தருடைய பாத்திரங்களில் மது அருந்தினார்கள். 17இப்பொழுது, மனிதன் ஒரு குறிப்பிட்ட வரையறை மட்டுமே போவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான், ஆனால் ஜீவனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு பிரிவினை கோடு இருக்கிறது அதை நீங்கள் ஒருபோதும் கடக்கக்கூடாது. கொஞ்ச நாட்களுக்கு உங்களுடைய அற்ப முட்டாள்தனத்தினால் நீங்கள் அவ்விதம் ஜீவிக்கலாம், ஆனால் அந்த பிரிவினை கோடு எங்கே இருக்கிறது என்பதை மட்டும் நீங்கள் அறிந்திருப்பது நலமாயிருக்கும். எப்பொழுதாவது கர்த்தர் உங்களை ஏதாவதொன்றில் சரி செய்திருக்கிறாரா? அவர் நம்மெல்லாருக்கும் அவ்விதமாக செய்கிறார், எப்படியெனில், கடிவாளத்தை பிடித்து இழுத்து, 'இப்பொழுது நீ வெகுதூரம் சென்றுவிட்டாய்'', என்பார். அதாவது அந்த கோட்டை கடக்கும் பட்சத்தில் அங்கு நீ என்ன செய்கிறாய் என்பதில், கவனமாயிருப்பது நலமாயிருக்கும். 18எனவே அந்த இரவில் தேவன் அவனுடைய கடிவாளவாரை பிடித்து இழுத்தும், அதற்கு அவன் செவி கொடாமல், தொடர்ந்து சென்று, தேவனுடைய பாத்திரங்களை வெளியே கொண்டுவந்து, தன்னுடைய தேவனுக்கு மரியாதை செலுத்தும்படிக்கு எல்லோருமாக கோப்பைகளை உயர்த்தி, மது அருந்த துவங்கினார்கள். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு கரம் தோன்றி, 'மெனெ, மெனெ, தெக்கெல், உபாசின்“, என்று சுவற்றின் மேல் எழுதினது, அதற்கு அர்த்தம், 'நீ தராசிலே நிறுத்தப்பட்டு, குறைவுபட்டாய்”, என்பதாகும். ஒருவராலும் அதற்கு வியாக்கியானம் கொடுக்க முடியவில்லை, அது அந்நிய பாஷையில் இருந்தது. ஆனால் வியாக்கியானம் அளிக்கக்கூடிய வரத்தைக் கொண்ட ஒரு மனிதன் அங்கே இருந்தான். அவன் பெயர் தானியேல். எனவே அவன் அங்கே வந்து, வியாக்கியானம் அளித்து, என்ன நடக்கப் போகிறது என்பதை இராஜாவுக்கு அறிவித்தான். அதினிமித்தம் பாபிலோன் என்ற தேசத்தை தேவன் அழித்துப் போட்டார். 19எனவே தானியேல் அங்கே இருந்தபோது அவன் முக்கியமான தரிசனங்களைக் கண்டு, நாம் இன்றைக்கு பெற்றிருக்கிற இந்த பெரிய ஆறுதலுக்காகவும், புறஜாதி ராஜ்யத்தின் முடிவை அறிந்து கொண்டு, அதை ஒழுங்கு நிலையில் வைக்கும்படிக்கு, அவைகளை எழுதி வைத்தான். இப்பொழுது அது எவ்வளவு தெளிவாய் இருக்கிறது. எனவே அதை கூர்ந்து கவனியுங்கள். அவன் இராஜாவின் சொப்பனத்துக்கு வியாக்கியானம் அளித்தபோது, அதின் சொரூபம் வெளியில் நிற்பதை முதலாவது கண்டான். அவன் ஒரு ஆவிக்குரிய மனிதன். அவன் சொப்பனங்களைக் கண்டு, தரிசனங்களைப் பார்த்து, சொப்பனங்களுக்கு வியாக்கியானம் அளித்தான். தேவன் அவனோடு கூட இருந்தார் மற்றும் அதை ஒவ்வொருவரும் அறிந்தும் இருந்தனர். எனவே அவன் தரிசனத்தைக் கண்டபோது, அதினுடைய தலை பொன்னிலும், மார்பு வெள்ளியிலும், தொடைகள் வெண்கலத்திலும், பாதம் இரும்பிலும் இருந்தது. கவனிப்பீர்களானால், ஒவ்வொரு ராஜ்யமும் கொஞ்சம் கொஞ்சமாக கடினமாகிக் கொண்டேபோனது. இராஜா நேபுகாத்நேச்சாரின் ராஜ்யம் தங்கத்தினால் ஆனதாய் இருந்தது. அதற்கு அவன் வியாக்கியானம் அளித்து, அந்த ராஜ்யங்கள் எப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக ராஜ்ய பாரத்துக்கு வந்து முடிவடையும் என்பதை கச்சிதமாக எடுத்துக் கூறினான். எனவே கவனியுங்கள், மிருதுவான தங்கத்திலிருந்து, வெள்ளி அடுத்ததாக வந்தது, அடுத்ததாக வெண்கலம், அதற்கு அடுத்து இரும்பு, இப்படியாக தூர போகப்போக கடினமாகி, கடினமாகி, குளிர்ந்து போனது. கவனியுங்கள். எனவே இவை எல்லாவற்றிற்கு மத்தியில் தானியேல் அந்த சொரூபத்தை கவனித்துக் கொண்டிருந்தபோது, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்லானது மலையிலிருந்து பெயர்க்கப்பட்டு, அந்த சொரூபத்தின் மேல் மோதி, அதை உடைத்து, கோடைகால பதறடிக்கும் தரையிலிருக்கும் கோதுமையைப் போல மாற்றிப் போட்டது, பின்னர் காற்றடித்து அதை பறக்கடிக்கச் செய்தது, அந்த கல்லோ மலையைப் போல் பெரிதாகி பூமி மற்றும் சமுத்திரம் முழுவதும் நிரப்பினது. அது மிகவும் சமீபத்தில் இருக்கிற, கர்த்தராகிய இயேசுவின் வருகையாக இருக்கிறது. 20அவன் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் நதியண்டை இருந்தபோது, அவன் தன் நிலையை மறந்து, ஒரு தரிசனத்தை கண்டான். அவனோடு இருந்த அநேகர் அந்த தரிசனத்தை பார்க்கவில்லை, ஏனெனில் அது தானியேலுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை கவனித்தீர்களா? உங்களுக்கு பக்கத்தில் நிற்கும் ஒருவரால் உங்கள் ஜீவனை காப்பாற்றும் படிக்கு நீங்கள் பார்க்க முடியாத காரியங்களை அவரால் பார்க்கமுடியும். அது சரிதான். யாரோ ஒருவர், 'அதை நான் விசுவாசிக்கமாட்டேன், ஏனெனில் நான் எதையும் பார்க்கவில்லை'', என்றார். காரணம் அதை பார்க்கும்படிக்கு அது உனக்கு கொடுக்கப்படவில்லை. பவுல் குதிரையிலிருந்து தள்ளப்பட்டு, மண்ணிலும், தண்ணீரிலும் விழவேண்டியதாய் இருந்தது, அவ்விதமாய் அவன் மண்ணில் விழுந்த நிலையிலிருந்த போது, பவுலோடு சென்ற ஒருவரும் அந்த சத்தத்தையோ அல்லது அந்த தரிசனத்தையோ பார்க்கவில்லை. ஆனால் பவுல் அதைப் பார்த்தான். அவ்விதமே ஒவ்வொரு வானஆராய்ச்சி கூடத்தையும் கடந்து சென்ற அந்த நட்சத்திரத்தை ஞானிகளை தவிர வேறுயாரும் பார்க்கவில்லை. ஒரு சிலர் பார்க்கும்படிக்கும், மற்றவர்கள் அதை பார்க்கக் கூடாதபடிக்கும் தேவன் அநேக காரியங்களை அவ்விதமாக செய்திருக்கிறார். ஓ, அதை நான் நேசிக்கிறேன். எனவே தேவன் தன் முடிவில்லா ஞானத்தினால் ஒரு சில காரியங்களை நிகழும்படிக்கு முன் குறித்தோ அல்லது முன் நியமித்திருக்கும் போதோ, அது உங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நபருக்கு நிகழும் ஆனால் நீங்களோ அதைக் குறித்து ஒன்றும் அறியாமல் இருக்கலாம். தோத்தானை கவனியுங்கள்: எலியா தோத்தானில் இருக்கும்போது, அங்கே அவர்களெல்லாரும் அந்நிய நாட்டிலிருந்து வந்திருந்தவர்களால் சுற்றி வளைக்கப்பட்டு, சீரிய சேனையானது எலியா தீர்க்கதரிசியை தேடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் சீரியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வருவதை அவர்கள் அறிந்து கொண்டு, அதற்கேற்ப, இஸ்ரவேலர்களும் அவர்களை தாக்கும்படிக்கு, பதிவிருப்பார்கள். எனவே சீரியா இராஜா அவர்களை அழைத்து, 'இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள், நம் பட்சத்தில் யார் இருக்கிறார்கள் என்றும் இஸ்ரவேல் பட்சத்தில் யார் இருக்கிறார்கள் என்றும் கேட்டான்“, 'மேலும் என்னுடைய சேனையில் ஒரு உளவாளி இருந்துக் கொண்டு, நாம் எவ்விடத்தில் வருகிறோம் என்று இஸ்ரவேலுக்கு அறிவிக்கிறான், அதினிமித்தம் அவர்கள் நமக்காக பதிவிருக்கிறார்கள்” என்றான். ஆனால் ஒரு மனிதனுக்கு அவனைக் குறித்துக் கொஞ்சம் பகுத்தறிதல் இருந்தது, எனவே அவன், 'இல்லை, என் தகப்பனே, ஏனெனில் அதற்கு காரணம் எலியா தீர்க்கதரிசி, அவன் தன் படுக்கை அறையிலிருந்து நீங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்வான்“, என்றான். ஆமென். ஓ, அணு ஆயுதங்கள் அசைய ஆரம்பிக்கும்போது, அப்பொழுது நாம் எங்கு செல்ல வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை நமக்கு கூறியிருப்பதற்காக நாம் சந்தோஷமடைகிறோம். அது கிறிஸ்து இயேசுவாகிய கன்மலையண்டைக்கு ஓடுங்கள் என்பதாய் இருக்கிறது. அதற்குள் இருக்கிறவன் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பான். உங்களை ஒன்றும் சேதப்படுத்தாது. எந்த அணு குண்டுகளும், எந்த கோபால்டுகளும், வேறெதுவும் தேவனால் பாதுகாக்கப்பட்டவர்களை தொட முடியாது. அவர்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், நங்கூரமிடப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். எப்பேற்பட்ட ஆச்சரியமான கிருபையை நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக பெற்றிருக்கிறோம். 21கவனியுங்கள், அவரோடு கூட ஒரு மனிதன் இருந்தான், அவன்தாமே அவனுடைய வேலைக்காரனும், ஆவிக்குரிய பையனும் அந்த தீர்க்கதரிசியின் கரங்களில் தண்ணீர் வார்த்து, பணிவிடை செய்கிறவனாய் இருந்தான். அவன் ஒரு பெரிய நிலையில் இருந்தான். ஆனால் சீரிய இராணுவம் தோத்தானை சுற்றிலும் இருப்பதையும் மற்றும் அது முழுவதும் சூழப்பட்டிருப்பதையும் அவன் கண்டு, 'என் தகப்பனே, அங்கே வெளியில் பாருங்கள், எவ்வளவு ஒரு பெரிய சேனை. ஆம், நாம் சுற்றி வளைக்கப்பட்டோம்'', என்றான். இப்பொழுது அது இயல்பானதுதான். எனவே, ஒவ்வொன்றும் தவறாகப் போவதைப் போல் காணப்பட்டு, உங்களை நோக்கி விரலை சுட்டிக்காட்டி, இதையும் அதையும் கூறலாம். மேலும் மருத்துவரும் கூட நீங்கள் சுகமடையப் போவதில்லை என்றும் இன்னும் அதுபோன்று காரியங்களைக் கூறலாம், அப்பொழுது, 'ஓ, இதுதான் என் முடிவு'' என்று நீங்கள் நினைப்பது இயற்கைதான். ஆனால் எலியாவோ, 'அவர்களோடு இருப்பவர்களைக் காட்டிலும் நம்மோடு இருப்பவர்கள் அதிகம்'', என்றார். இப்பொழுது நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், எப்படியாக அந்த தீர்க்கதரிசி... அல்லது அந்த வேலைக்காரன் கேயாசி எப்படி உணர்ந்திருப்பான் என்று. அவன் அவரை நோக்கி, 'எப்படி, நான் ஒருவரையும் காணவில்லையே'', என்றான். அவர், 'தேவனே, இவனுடைய கண்களைத் திறந்திடும்“, என்றார். எனவே தேவன் உடனடியாக காரியத்தை செய்தவுடன் இதுதான் காரியம், புரிந்துக் கொண்டீர்களா? தேவன் அவனுடைய ஆவிக்குரிய கண்களை திறந்தவுடன், தீர்க்கதரிசியை சுற்றிலும் அக்கினி மயமான இரதங்களும், அக்கினி மயமான தூதர்களும் நின்றிருந்தார்கள். ஏனெனில், அவன் பார்த்தான். ஏனெனில் சீரிய படையைக் காட்டிலும் அக்கினிமயமான இரதங்கள் ஆயிரக்கணக்கில் அதிகமாக இருந்தது. அந்த மலைகள் முழுவதும் அக்கினி மயமாகவும், அக்கினி மயமான தூதர்களாலும், அக்கினிமயமான குதிரைகளாலும், அக்கினிமயமான இரதங்களாலும் நிரம்பியிருந்தது. வேதாகமமும், 'அவருக்கு பயந்தவர்களை சுற்றிலும் தேவதூதர்கள் பாளையமிறங்கி இருப்பார்கள்”, என்று கூறுகிறது. 22இன்றிரவும் அதே விதமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை இன்றிரவு இங்கே இருக்கும் ஒரு மனிதன் தன் வல்லமையினால் இவர்களுடைய கண்களை திறக்கும்படி செய்து, 'கவனியுங்கள், இன்றிரவு இந்த கூடாரத்தைச் சுற்றிலும் நிற்பவர்களை...“ என்று கூறுவாரென்றால், அப்பொழுது என்ன நடக்கும் என்பதைக் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். அதன்பின் உங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கே நீங்கள் ஒரு அங்கத்தினராகிவிடுவீர்கள். நிச்சயமாக, ஆம், ஐயா. சில சமயங்களில் நீங்கள் உங்கள் இயற்கையான கண்களால் பார்க்க முடியாது, ஆனால் அதின் துடிப்பை நீங்கள் உணரலாம்: ஏதோ காரியம் அருகில் இருக்கிறதென்று ஆறாவது புலன் அதை உணர்த்தும். அவர் இந்த காலையில் செவிடரின் காதுகளை திறந்ததையும், போலியோவால் முடமானவர்களை, இங்கே நடக்கச் செய்து, இதற்கு முன்பு இவ்விதமாக இவர்கள் பாதிக்கப்படாதவர்களைப் போல செய்ததை நீங்கள் கவனித்தீர்கள். அது என்ன? நான் கூறுவது, (the sense) புலன், ஆறாவது புலன், ஆவியானவர் என்ற ஒரு காரியம் அருகில் இருக்கிறது என்ற உணர்வுடன் அது இருக்கும். தேவனை விசுவாசியுங்கள். 23இப்பொழுது அதை அவன் முதலில் பார்க்காமல் இருக்கலாம். ஒருவேளை எலியாவும் கூட அதை பார்க்காமல் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர் அந்த பையனுடைய கண்கள், அதை பார்க்கும்படிக்கு கேட்டுக் கொண்டார்; எனவே அவர்கள் அங்கே இருக்கிறார்கள் என்ற உணர்வுடன் எலியா இருந்தான். ஆமென். ஒருமுறை தோமா, 'என்னுடைய கைகளை அவருடைய விலாவில் விடட்டும்'', என்றான். இயேசு, 'இப்பொழுது நீ பார்த்து, விசுவாசிக்கிறாய்; ஆனால் காணாமல் விசுவாசிக்கிறவர்களின் வெகுமதி எவ்வளவு பெரிதாய் இருக்கும்“, என்றார். காணாமல் விசுவாசிப்பவர்கள் அது யாராயிருப்பினும், இன்றிரவு அதில் நாம் இருக்கிறோம். எனவே கவனியுங்கள், அதன்பிறகு எலியா அங்கே வெளியே இருக்கும் இராணுவத்தினிடத்தில் சென்று, அவர்களிடத்தில் அவன் கூறினதாவது... முதலில் அவன் வெளியே சென்று, அவர்களை அவன் குருட்டாட்டத்தினால் அடித்து, அவர்கள் முன்பாக நடந்து சென்றான் என்று வேதாகமம் கூறுகிறது. எனக்கு தெரிந்த மட்டும் அவர்களுக்கு நல்ல கண்பார்வை இருந்தது. ஆனால் வேதாகமம் கூறுகிறது அவர்கள் குருடாயிருந்தார்கள் என்று. ஒரு சில இரவுகளுக்கு முன்னர் ஒரு சிறிய மனிதன் என்னிடத்தில், 'நீங்கள் ஒரு தேவ மனிதனாக இருந்தால் என்னை குருடாக்கிப் போடும்“, என்றான். அதற்கு நான், 'நீ ஏற்கனவே குருடாயிருக்கிறாய்”, என்றேன். பாருங்கள் ஏற்கனவே அவன் குருடாயிருக்கிறான். 24கவனியுங்கள், எனவே அவன் அங்கே வெளியே இருக்கும் பெரிய இராணுவத்தினிடத்தில் சென்று, இந்த பெரிய இராணுவம் இருக்கும் இடத்திற்கு, 'நீங்கள் எலியாவை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?“ என்றான். அவர்களும், 'ஆம்'', என்றனர். இவரும், 'என் பின்னே வாருங்கள், நான் உங்களை அவனிடத்தில் கொண்டு செல்கிறேன்'', என்றார். எலியா அதை அவர்களிடத்தில் கூறினான். அவர்கள் எதைக் குறித்து குருட்டாட்டமாய் இருந்தார்கள்? அது தேவனுடைய தீர்க்கதரிசிதான் என்ற உண்மைக்கு குருட்டாட்டமாய் இருந்தார்கள். அதற்கு அவர்கள் குருட்டாட்டமாய் இருந்தார்கள், அவர்களை அவன் சரியாக எதிராளிகள் பதிவிருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றான். அவர், 'வாருங்கள், நான் உங்களுக்கு எலியாவை காண்பிக்கிறேன்'', என்றார். ஆனால் அவர்களை அங்கே கீழே கொண்டு சென்றது எலியாதான். எனவே, அவர்கள் சுற்றும் முற்றும் கவனித்து, அவர்கள் சூழப்பட்டிருப்பதை அறிந்தபோது, 'என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா'', என்று இராஜா கேட்டான். அதற்கு அவர், 'சிறைபிடிக்கப்பட்ட ஒருவனை பிடித்து, அவனை வெட்டிப்போடுவாயோ?'' என்றார். 'அவர்களுக்கு ஏதாவது புசிக்கக் கொடுத்து, அவர்களை திரும்பவும் அவர்கள் தேசத்துக்கு அனுப்பிவிடும்“, என்றார். அதுதான் யுத்தங்களை தீர்ப்பதற்கான வழியாய் இருக்கிறது. அது சரிதானே? நிச்சயமாக. ஓ, என்னே‚ உங்களுடைய எதிராளிக்கு ஆகாரம் கொடுங்கள் - அந்த கோட்பாட்டை மட்டும் நாம் கடைப்பிடிப்போமானால், நலமாயிருக்கும். உங்களுக்கு தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். ஆமென். 25இப்பொழுது எலியா... அல்லது, நான் கூறுவது, அது எலியா அல்ல, ஆனால் தானியேல். தான் ஒரு தீர்க்கதரிசி என்பதை தானியேல் முன்னமே கண்டு கொண்டான். அவன் தேவனுடைய வருகையை முன்னமே பார்த்தான். முடிவுகாலம் வருகிறதை அவன் பார்த்தான். புறஜாதி காலம் துவங்குவதை அவன் பார்த்தான், நீங்கள் கவனிப்பீர்களானால், புறஜாதி காலம் ஒரு சிலையை ஆராதிப்பதிலேயிருந்துதான் துவங்கினது. அங்கே வெளியே அமைக்கப்பட்ட ஒரு பெரிய சிலையை அவர்கள் ஆராதித்தனர், அது ஒரு மனிதனுடைய சிலை, அது தானியேல் தான் என்று நான் விசுவாசிக்கிறேன். இராஜா நேபுகாத்நேச்சார் அவனை பெல்ஷாத்சார் என்று அழைத்தான், காரணம் அது அவனுடைய தேவனின் பெயர். எனவே அவன் ஒரு நீதியுள்ள, பரிசுத்த மனிதனின் சொரூபத்தை ஆராதிக்க ஆரம்பித்தான். ஆனால் தானியேல் அவ்விதம் செய்ய மறுதலித்தான். அவ்விதமே எபிரேய பிள்ளைகளாகிய சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நெகோ அவர்களும் அவ்விதம் செய்தனர். அந்த வழியில் தான் அது துவங்கினது, ஆனால் அது கண்டனத்துக்குள்ளானது. அந்த பொன்னாலான தலையானது சொரூபத்தை வணங்குவதில் துவங்கி; அதை வணங்கும்படிக்கு வற்புறுத்தப்பட்டு; இயற்கைக்கு மேம்பட்ட அறிவினால் மட்டுமே புரிந்துக்கொள்ளக் கூடிய இயற்கைக்கு மேம்பட்ட மொழியினால் எழுதப்பட்ட இயற்கைக்கு மேம்பட்ட கை எழுத்தில் முடிவடைந்தது. ஆமென். அந்த வழியில்தான் புறஜாதி ராஜ்யமானது துவங்கினது, மற்றும் அது அந்த வழியிலேயே தான் முடிவும் அடையும். அது சரிதான், எப்படியெனில் இயற்கைக்கு மேம்பட்ட கிரியைகளாலும், இயற்கைக்கு மேம்பட்ட வியாக்கியானத்தின் மூலமே. நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அது இயற்கைக்கு மேம்பட்ட செய்கையாய் இருக்கிறது. ஓ, அது எவ்வளவு அற்புதமானது. இன்று இரவு இயற்கைக்கு மேம்பட்டதை விசுவாசிப்பதில் நீங்கள் சந்தோஷப்படவில்லையா? ஆம். 26எனவே, தேசங்கள் எங்கே நிற்கும் என்ற தரிசனங்களை அவர் அவனுக்கு காண்பித்த பிறகு, யூதர்கள் இன்னும் மிக அதிகமான வருடங்களுக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதை அவர்களுக்கு அவன் காண்பித்தான். மேலும் அவன், 'மேசியா வருவார். அவர் வந்து, ஏழுபதாவது வாரத்தில், மூன்றரை வருடங்களுக்கு தீர்க்கதரிசனம் உரைப்பார், பின்னர் ஏழு வருடங்களின் மத்தியில் அவர் சங்கரிக்கப்படுவார்'', என்றான். எழுபது வாரங்கள் உம்முடைய ஜனங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. தோராயமாக ஏழு வருடங்கள் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, பிரபுவாகிய மேசியா - வந்தபோது வாரத்தின் மத்தியில் பிரசங்கித்து, பின்னர் அவர் சங்கரிக்கப்படுவார். பாழாக்கும் அருவருப்பு அதன் இடத்தில் இன்றைக்கும் நிற்கிறது. அங்கே எருசலேமில் இருக்கும் மதிற்சுவர்களை, காலமும், காலமும், அரைக்காலமும் புறஜாதியார் மிதித்துப் போடுவர். மேசியாவாகிய, இயேசு வரும்போது அவர் சரியாக மூன்றரை வருடங்கள் பிரசங்கித்து பின்னர் பலியிடப்படும்படிக்கு அவர் சங்கரிக்கப்படுவார், அன்றாட பலி நீக்கப்படும் பாழாக்கும் அருவருப்பாகிய ஓமர் மசூதி பரிசுத்த ஆலயம் இருந்த இடத்தில் இன்று இருக்கிறது. பரிசுத்த ஆலயம் இருந்த அதே இடத்தில் ஓமர் மசூதி நிற்கிறது. அங்கே எருசலேமில் இருக்கும் மதிற் சுவர்களை புறஜாதியாரின் காலம் முடியும் வரைக்கும் அவர்கள் மதித்துப் போடுவர். ஆனால் புறஜாதியாரின் முடிவில் மீதி மூன்றரை வருடங்கள் யூதர்களுக்கு விடப்பட்டிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள், இது தீர்க்கதரிசன வரலாற்றின் கவனத்தை ஈர்க்கத்தக்க ஒரு காரியமாக இருக்கிறது. நான் வேதாகம தீர்க்கதரிசனத்தை அறிந்தவன் என்று உரிமை கோரவில்லை, ஆனால் இது ஒரு செய்திதாளை வாசிக்கிற அளவுக்கு அவ்வளவு தெளிவாய் இருக்கிறது. எனவே இங்கே நாம் வாசிக்கிறதை சத்தியம் என்று அறிந்திருக்கிறோம். 27கவனியுங்கள், வானத்தின் கீழாக இரண்டாயிரம்... அல்லது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக ஒவ்வொரு தேசத்திலும் யூதர்கள் சிதறடிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை திரும்ப கொண்டு வரும்படிக்கு, தேவன் பார்வோனுடைய இருதயத்தை கடினப்படுத்தியது போல, அவர்களை அவர் பாலஸ்தீனாவுக்கு திரும்ப கொண்டுவரும் வரைக்கும், அவர் ஹிட்லருடைய இருதயத்தையும், முசோலினியின் இருதயத்தையும் கடினப்படுத்தினார். அவர்கள் திரும்ப வந்து, தங்களுக்கென்று ஒரு தேசத்தை உண்டாக்கினார்கள், எனவே மே மாதம் 6ம் தேதி, 1947ம் ஆண்டு யூத கொடியானது முதன் முறையாக இஸ்ரவேல் தேசத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகு ஏற்றப்பட்டது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளில் உலகத்திலேயே மிகவும் பழமையான கொடியானது ஏற்றப்பட்டது. எனவே, கடைசி நாட்களில் காலம் சமீபித்திருக்கிறது என்பதை காண்பிக்கும் பொருட்டு, எருசலேமில் ஒரு அடையாளத்தை எழுப்புவார் என்று அவர் கூறியிருக்கிறார். எனவே கவனியுங்கள், கொஞ்ச நாட்களுக்கு முன் அங்கிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தீர்க்கதரிசன படத்தை நான் பார்த்தேன், அதில் ஆயிரக்கணக்கில் விமானங்கள் மூலம் அந்த யூதர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அதை நீங்கள் செய்தித் தாள்களிலும் இன்னும் மற்றவைகளிலும் பார்த்திருக்கலாம். லுக் (look) மற்றும் லைஃப் (life) பத்திரிகைகள் அதை வெளியிட்டன. ஆயிரக்கணக்கில் யூதர்கள் திரும்பி வந்தனர். அவர்கள், 'நீங்கள் எதற்காக திரும்பி வருகிறீர்கள்?“ என்று அவர்களை கேட்டனர். வயதான முடமாகிப் போன மக்கள் தங்கள் முதுகில், தங்களுடைய சிறு பிள்ளைகளை சுமந்துக் கொண்டு வந்தார்கள். 'நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு மரிப்பதற்காக வருகிறீர்களா?” என்று அவர்களை கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இல்லை, நாங்கள் எங்கள் மேசியாவை காண திரும்பி வருகிறோம்“, என்றனர். இயேசுவும், 'அத்திமரம் துளிர் விடுகிறதையும், இன்னும் மற்ற எல்லா மரங்களும் துளிர் விடுகிறதையும் அல்லது வசந்த காலம், கோடைகாலம் சமீபமாயிருப்பதை நீங்கள் காணும்போது காலம் சமீபமாயிருக்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எனவே இந்த காரியங்கள் நிறைவேறுவதை நீங்கள் காணும்போது, உங்கள் தலைகளை உயர்த்துங்கள், ஏனெனில் உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது'' என்றார். 28இன்றிரவு இந்த உலகமானது கம்யூனிசத்தினால் தளர்ந்து போயிருக்கையில்... ஓ, எனக்கு தெரிந்தமட்டும் உயர்ந்த அதிகாரங்களில் இருக்கும் ஒரு மனிதனிடத்தில் கொஞ்ச நேரத்திற்கு முன்னர் பேசிக் கொண்டிருந்தேன், இந்த தேசம் கம்யூனிசத்தில் இருப்பதை குறித்ததான காரியங்களை அவர் பேசும்போது, அது உங்கள் முழங்கால்களை நடுங்க செய்துவிடும். அது சரி. அது எவ்வளவாய் தளர்ந்து போயிருக்கிறது, திடமானது என்பது இனி இருக்கப் போவதில்லை, நம்முடைய சொந்த தேசத்திலும் அது கொஞ்சம் கூட இல்லை. ஒரே ஒரு அஸ்திபாரம் மட்டுமே அதற்கு நிற்கும், அது கன்மலையாகிய இயேசு கிறிஸ்து. நாம் அசைக்கப்பட முடியாத ஒரு ராஜ்யத்தை பெற்றுக் கொள்ளப் போகிறோம். எனவே இந்நாட்களில் ஒவ்வொன்றும் விழுந்து கொண்டு இருக்கும்போது, நமக்கோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் திடமான அஸ்திபாரம் இருக்கிறது. அதற்குள்ளாக ஓடி வாருங்கள், நண்பர்களே, புயலடிக்கும் நேரத்தில் அது ஒரு அடைக்கலமாய் இருக்கும். அது எப்பேற்பட்ட ஒரு அற்புதம். 29இவையாவும் நிறைவேறுகிறதை அவர் பார்த்தார். இப்பொழுது யூதர்கள் அவர்களுடைய சொந்த நாட்டில் இருப்பதை நாம் பார்க்கிறோம். வேதாகமம் கூறுகிறது, எருசலேம், அது ஒரு ரோஜாவைப் போல் துளிர்விடும். எனவே அவர்களும் எப்படியாக அந்த தேசத்தை நீர்பாசனம் செய்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள்... தீர்க்கதரிசியும் அதைக் குறித்துப் பேசியிருக்கிறார், 'அந்நாளில் அந்த தண்ணீரானது வடக்கிலிருந்து புறப்பட்டு வரும் என்று''. அது வரைக்கும் அங்கே தண்ணீர் இல்லாமலிருந்தது, எந்த ஒரு நீரூற்றும் அங்கே அதுவரைக்கும் இல்லாமலிருந்தது, ஆனால் கடைசியான சில வருடங்களில் அங்கே வனாந்திரத்தில் தண்ணீரை பீறிட்டு அடிக்கும் ஒரு பெரிய கிணறு அங்கே மேலே வந்தது. அவர்கள் நீர் பாசனம் செய்யும் விவசாய நிலத்தின் அளவு அதன் பரப்பளவிற்கு உலகில் இருக்கும் பெரிதான விவசாய நிலத்தில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்கே சவக் கடலில் இந்த எல்லா விலைமதிப்பு மிக்க இரசாயனங்கள் இருக்கிறது, உலகத்தில் இருக்கும் எல்லா செல்வங்களும் வாங்க முடியாத அளவுக்கு அவ்வளவு இரசாயனங்கள் அங்கே அதின் அடியில் இருக்கிறது. யுரேனியம், மற்ற இரசாயனங்கள், இன்னும் ஒவ்வொன்றும் அந்த சவக் கடலின் அடியில் இருக்கிறது, இப்பொழுது அவையாவும் இஸ்ரவேலுக்கு சொந்தமாயிருக்கிறது. 30அத்திமரமானது துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமில்லை, மற்ற மரங்களும் துளிர்விட ஆரம்பித்திருக்கிது. கம்யூனிஸம் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது, அந்தி கிறிஸ்து துளிர்விட ஆரம்பித்திருக்கிறது, மற்றும் தேவ சபையும் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. அவள் தன்னுடைய வல்லமையில் திரும்பவும் எழும்பி வருகிறாள்; அதின் ஒரு பகுதியை பச்சைப் புழு தின்றுபோட்டது, இன்னொரு பகுதியை பச்சைக் கிளி தின்றுபோட்டது, இன்னொரு பகுதியை கொக்கிப் புழு தின்றுபோட்டது, இன்னொரு பகுதியை கம்பளிப் பூச்சி தின்றுபோட்டது, ஆனால் தேவன், 'அது மறுபடியும் பிழைக்கும்'', என்று கூறியிருக்கிறார். இப்பொழுது அவள் துளிர்விட்டு எழும்புகிறாள். மற்ற எல்லா மரங்களும் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. தானியேல் அதை முன்னமே கண்டு களிகூர்ந்தான். 31இப்பொழுது, 'இந்த நேரத்தில்“, என்று அவர் கூறியிருக்கிறார். 12-ம் அதிகாரத்தில் 'அந்த நேரத்தில்”. அந்நேரத்தில் உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். ஓ, என்னே‚ உங்களுடைய பெயர் அவருடைய புஸ்தகத்தில் இருப்பதற்காக நீங்கள் சந்தோஷப்படவில்லையா? அவர் தாமே... இவ்விடத்தில் அவர், பூரண ஆயுசுள்ளவரிடத்தில் வருகிறதை தானியேல் கண்டான். அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும், பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந்தது. அவர் புஸ்தகங்களை திறந்தபோது, அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே ஒவ்வொரு மனிதனும் அவர்களெல்லாரும் நியாயத்தீர்ப்படைந்தார்கள். அதுதாமே மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பாயிருக்கிறது. 32இப்பொழுது, தானியேலுக்கு இந்த நிச்சயமானது கொடுக்கப்பட்டது, அது புறஜாதிகளின் யுகத்தின் முடிவில்... நீங்கள் வீட்டிற்கு சென்றதும் அதைப் படித்துப் பாருங்கள், நாளைக்கு தானியேல் 11-ம் அதிகாரத்தை படியுங்கள். அதில், வடதிசை இராஜாவானவன்; அது ரஷியாவை தவிர வேறொன்றுமில்லை, எப்படியாக அவன் சுழல் காற்றைப் போல் அதற்கு விரோதமாக வருவதை உங்களால் பார்க்கமுடியும். அப்பொழுது அங்கே எருசலேமின் வாசல்களண்டையிலே அந்த பயங்கரமான அர்மெகதான் யுத்தம் நடைபெறும். கவனியுங்கள், ஓ, இதை நான் நேசிக்கிறேன். எனவே அக்காலத்தில், புஸ்தகத்தில், ஆட்டுக்குட்டியானவரின் புஸ்தகத்தில் காணப்பட்ட உம்முடைய ஜனத்தில் ஒவ்வொருவரும் விடுவிக்கப்படுவார்கள். பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். எதற்காக? உம்முடைய ஜனங்களுக்காக. அது சரிதான். பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிற அநேகர் எழுந்திருப்பார்கள். எப்பொழுது? இந்த காலங்கள் நிறைவேறும் போது. 'சிலர் நித்திய ஜீவனுக்கும் சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்“. 33நித்திய ஜீவன் இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்விதமே நித்திய பிரிந்து போகுதலும் இருக்கிறது. உன் ஜீவியத்தில் நீ இயேசு கிறிஸ்துவை எவ்விதமாய் நடத்துகிறாயோ அதுவே அதை தீர்மானிக்கும். நீ அவரை நேசித்து, மறுபடியும் பிறந்து அவருடைய ஆவியை பெற்றிருக்கும் போது நீ நித்திய ஜீவனை பெற்றிருப்பாய். அப்படி நீ பெறாத பட்சத்தில், உன்னிடத்தில் நித்திய ஜீவன் இருக்காது. உன்னுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் பெயரெழுதியிருக்கும்போது, நீ அழிவில்லாத ஜீவனை பெற்றிருப்பாய். அப்படி அது அங்கே எழுதியிராத பட்சத்தில், நீ அடையாளம் கண்டு கொள்ளப்பட மாட்டாய். அது என்ன? அந்த எல்லா தீர்க்கதரிசனங்களும், சரியாக ஒவ்வொன்றும் இந்நாள் வரையிலும் நிறைவேறினதாய் இருக்கிறது. 34தானியேல் கூறினவிதமாக பொன்னாலான தலையாகிய, பாபிலோனிய ராஜ்யம் கடந்து போனது, அதை தொடர்ந்து மேதியா பெர்சியர்கள் ராஜ்யபாரம் பண்ணுவார்கள் என்று அவன் கூறியிருந்தான். அவர்கள் பாபிலோனிய ராஜ்யத்தை ஜெயித்து, ராஜ்யபாரம் செய்தனர், ஆனால் அதற்கு பின் யாரிடத்தில் அவர்கள் தோற்றுப் போனார்கள்? கிரேக்கர்களாகிய மாபெரும் அலெக்ஸான்டரிடத்தில். பின்னர் இவர்கள் யாரிடத்தில் தோற்றுப் போனார்கள்? ரோமர்களிடத்தில். பின்னர் ரோமர்கள் உலகெங்கும் கிழக்கு மற்றும் மேற்கு ரோமர்களாக சிதறிப் போனார்கள். அவர்கள் தாம் அந்த இரண்டு கால்கள். பாத விரல்களில் இரும்பும் களிமண்ணும் இருந்தது, அந்த பத்து விரல்களும் பத்து ராஜ்யங்கள் என்று அவன் கூறியிருந்தான். மேலும் அவர்கள் ஒன்று சேர மாட்டார்கள், ஆனால் தங்களுக்குள் கலப்பின திருமணம் செய்து கொள்வார்கள். அது ரோமானிஸமும், பிராடஸ்டன்ஸ்முமாக (Romanism and Protestantism) இருக்கிறது. எனவே அந்நாளில் இந்த காரியம் இவ்விதமாய் இருக்கும்போது, அப்பொழுது கைகளால் பெயர்க்கப்படாத கல்லானது மலையிலிருந்து, பெயர்ந்து வந்து, அதை தூளாக உடைத்துப் போட்டது. அது அந்த சொரூபத்தின் இடத்தை எடுத்துக் கொண்டது. 35எனவே, என் சகோதரர்களே, இன்றிரவில் நமக்கு தொல்லைகள் இருக்கிறது, யுத்தங்களும், யுத்தங்களை குறித்ததான வதந்திகளும், வெவ்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகளும், காலத்தை குறித்ததான குழப்ப நிலையும், துயரங்களும் தேசங்களுக்கு இடையே இருக்கிறது. நான் வெளி நாட்டிலிருந்து கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் திரும்பி வந்தேன், ஆனால் பயத்தினால் நடுங்கிக் கொண்டிராத ஒரு தேசத்தை கூட என்னால் காணமுடியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்று அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். ஆனால் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அதற்காக நாம் நன்றியுற்றவர்களாக இல்லையா? கர்த்தராகிய இயேசு இரண்டாவது முறை மகிமையிலும், மாட்சிமையிலும், வருவார், அப்பொழுது ஆட்டுக் குட்டியானவரின் புஸ்தகத்தில் காணப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய அன்பானவர்களுடன் கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கும்படிக்கு எழும்புவார்கள். ஓ, என்னே ஒரு அற்புதமான காரியம். அந்த காரணத்தினால் தான் நாம், 'நம்முடைய நம்பிக்கை இயேசுவின் இரத்தத்தின் மூலமாக நீதியின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது என்றும், என்னுடைய ஆத்துமாவை சுற்றிலும் இருக்கிற யாவும் வீழ்ந்து போகும்போது அவரே நமக்கு நம்பிக்கையும், தஞ்சமுமாக இருக்கிறார்'', என்றும் கூறுகிறோம். 36அந்த காலத்தில் பெரிய அதிபதியாகிய மிகாவேல் நிற்பார். பரலோகத்தில் தூதர்களுடனான யுத்தத்தில் பிசாசுடன் சண்டையிட்ட மிகாவேல், உண்மையிலே அவர் கிறிஸ்துவாயிருக்கிறார். சாத்தானும் மிகாவேலும் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டனர்... தெளிவாக கூறுவோமானால், ஒருவருக்கு விரோதமாக ஒருவர் சண்டையிட்டனர். எனவே, 'அந்த காலத்தில்“, அவர், 'புத்தகத்தில் பெயரெழுதப்பட்டு காணப்பட்ட அத்தனை பேரும் விடுவிக்கப்படுவார்கள், மற்றும் நீதியை நடப்பித்த இவர்கள்...” கூறியிருக்கிறார். அதை கவனியுங்கள். ஞானவான்கள் ஆகாய மண்டலத்தில் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்“. 37சில சமயம் அதை நான் கவனிப்பேன். நான் நினைக்கிறேன்... சகோதரர்களே, நான் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்பட்டு சென்றிடுவேன்; நான் அதிகாலையில் எழும்புவதை விரும்புகிறேன். நீங்களும் அதிகாலையே எழும்ப விரும்பவில்லையா? நானும், சகோதரர்களும் மலைகளில் இருந்ததை நினைவு கூர்கிறேன். நாங்கள் அதிகாலையிலேயே, நான்கு மணி வாக்கில், எழும்பி அதோ அந்த விடிவெள்ளி நட்சத்திரம் அங்கே தூரத்தில் அடிவானத்தில் இருப்பதை கவனிப்போம். எனவே காலை விடிவதற்கு முன்பு உண்மையிலேயே அது மிகவும் இருளாயிருக்கும். இப்பொழுதும் இருள் சூழ்ந்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். அது எதை காண்பிக்கிறது. அது, வெளிச்சம் இருளுக்கு எதிராக வருவதாக இருக்கிறது. அது நிச்சயம் வழிவிட்டு ஆக வேண்டும். எனவே சூரியன் மேலெழும்பி வந்து, வெளிச்சமானது பிரகாசிக்க துவங்கும் போது, இரவில் திரியும் எல்லா ஊர்ந்து போகும் பிராணிகளும் மறைவிடத்தை நோக்கி ஓடும். ஒரே கட்டிடத்தில் இரவும், பகலும் இருக்கமுடியாது. அது ஒன்று இரவாக இருக்க வேண்டும் அல்லது வெளிச்சமாக இருக்க வேண்டும். வெளிச்சம் இருளைக் காட்டிலும் அதிக வல்லமையானது. அவ்விதமே உலகத்திலிருக்கும் எல்லா தீமையைக் காட்டிலும் கிறிஸ்து மிக அதிக வல்லமையுள்ளவராக இருக்கிறார். இப்பொழுது, விஞ்ஞானிகளால் நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம், அது என்னவெனில், வெளிச்சம் வரத் துவங்கும் போது, அது இருளை ஒட்டு மொத்தமாக சுருக்கிவிடுகிறது. அப்பொழுது இருள் தன்னுடைய எல்லா சேனையையும் திரட்டி வெளிச்சத்துக்கு விரோதமாக போரிடுகிறது, ஆனால் வெளிச்சம் அதை மேற்கொண்டு, மேலெழும்புகிறது. 38கடைசி நாட்களில் சாத்தான் கெர்சிக்கிற சிங்கத்தைப் போல அலைந்து திரிவான் என்று வோதாகமம் கூறுகிறது. அவன் தன்னுடைய எல்லா எதிரிகளையும், தன்னுடைய எல்லா நண்பர்களையும், நம்முடைய எதிரிகளையும் திரட்டி, அவர்களெல்லாரையும் ஒரு கூட்டமாக கூட்டி, மிருகத்தின் முத்திரை என்னும் பெரிய தலைமையின் கீழ் ஒட்டு மொத்தமாக கொண்டு வருகிறான். கிறிஸ்தவ சபை வட்டத்தில் பார்க்கும்போது, கத்தோலிக்கத்தைப் போலவே, அவையாவும் இணைந்து தங்களுக்கென்று ஒரு பெரிய அமைப்பான சபைகளின் ஐக்கிய சங்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. மற்றும் உலக சாம்ராஜ்யங்களும் தங்களுக்குள் ஒன்று கூடி, கம்யூனிஸம் என்று அழைக்கப்படும் அரசியல் வட்டத்தில் ஒரு பெரிய தலைமையை தங்களுக்கு ஏற்படுத்திக் கொள்கிறார்கள், ஆனால் தேவனுடைய ஜீவனோ தொடர்ந்து முன்னுக்கு போய்க் கொண்டிருக்கின்றன. 39இது நிகழும் அதே நேரத்தில் என்ன நிகழ்கிறது? கிறிஸ்தவ சபையாகிய, ஜீவனுள்ள தேவ சபையானது அபிஷேகம் பண்ணப்படுகிறது. வல்லமை அவளிடத்தில் வருகிறது. அவள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்கிறாள். கடந்த வருடம் முழு சுவிசேஷ வட்டாரத்தில் பதினைந்து லட்ச மனமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தொடர்ந்து வந்த வருடங்களில் இதுவே தேசத்தில் மிக வேகமாக பரவினதாக இருக்கிறது. இனிமேல் நாம் ஒருபோதும் ஒரு சிறிய தெருவில், இல்லை, ஆனால் நாம் அல்லேலூயா பெருவழியில் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம். இனி நாம் ஒருபோதும் ஒரு சிப்பிக் கூட்டுக்குள் இல்லை. கடந்த வருடத்தில் கத்தோலிக்கம் இன்னும் மற்ற யாவையும் காட்டிலும் பதினைந்து லட்சம் மனமாற்றம் பெற்றவர்களின் வரிசையில் முழு சுவிசேஷ சபை இடம்பெற்றது. ஓ, என்னே‚ அது என்ன? வெளிச்சம் கூடி வருகிறது. மகத்தான சுகமளிக்கும் ஆராதனைகள் இப்பூமி எங்கிலும் பரவிச் செல்கிறது. அல்லேலூயா‚ அங்கே ஃபார்மோசாவில், சுகமளிக்கும் கூட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கே ஜப்பானிலும் சுகமளிக்கும் கூட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கே மேலே இருக்கும் பனி உறைந்த வட பகுதிகளிலும் சுகமளிக்கும் கூட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் சுகமளிக்கும் ஆராதனைகள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. அல்லேலூயா‚ இருக்கும் ஒவ்வொரு மனிதனும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்கிறார்கள். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 40அது என்ன செய்கிறது? சாத்தானும், 'இப்பொழுது இது என்னுடைய நேரம்“ என்று கூறுகிறான். அவன் தன்னுடைய படைகளை (forces) ஒன்று சேர்க்கிறான். சபைகளின் ஐக்கிய கூட்டமைப்பு அதை நிறுத்திப்போட முயற்சிக்கிறது. எப்படியெனில், 'அவர்கள் வெறுமனே கூச்சலிடும் ஒரு கூட்ட ஜனங்கள். அவர்களிடத்தில் சொல்வதற்கென்று ஒன்றுமில்லை. அதெல்லாம் மதசம்பந்தமான வெறித்தனமே. இயற்கைக்கு மேம்பட்ட காரியம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் எதுவும் அவர்களிடத்தில் இல்லை”, என்று அவர்கள் கூறுகிறார்கள். அதே சமயம் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர், நாளிதழில் ஒரு செய்தியை எழுதினார், அதில், 'நோயாளிகளின் அறைக்கு வந்து, அவரை (தேவனை) தங்களின் சகாயராக ஏற்றுக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்கு ஊழியம் செய்ய எந்த மனிதனுக்கும் உரிமையில்லை'', என்று இருந்தது. கடந்த மாதம் மருத்துவர்களை பேட்டி எடுத்த 'தி கிறிஸ்டியன் ஹரால்டு… விமர்சனம் ஒன்றை எழுதியது. அது, 'நான் அதைக் குறித்து மெச்சிக் கொள்ள முயற்சிக்கும்போது, என்னைப் பற்றி நான் எழுதக்கூடாது', என்றது. அது என்னவாயிருக்கிறது? ஒவ்வொரு காரியத்திற்கு மத்தியிலும் தேவன் தன்னுடைய எதிரிகளை அவருடைய மகிமைக்காக சாட்சி பகரும்படிக்கு செய்கிறார். ஆம், ஐயா. மருத்துவரும், 'எங்களால் மருந்துதான் கொடுக்கமுடியும், ஆனால் தேவன் தான் சுகமளிப்பவராக இருக்கிறார்“, என்கிறார். நான், 'ஒரு கூட்ட பேதைகளாகிய நாம் எல்லா நேரத்திலும் அறிந்ததை இந்த புத்திசாலி மக்கள் இப்பொழுது இது உண்மை என்பதை அறிந்து கொள்கிறார்கள்”, என்றேன். அது சரி. இந்த மகிமையான நாட்களில் என்றாவது வேசிகளாயிருந்தவர்களை சீமாட்டிகளாகவும், குடிகாரர்களாயிருந்தவர்களை கனவான் களாகவும் இந்த முழு வல்லமை மாற்றி, அவருடைய பிரசன்னம் இந்த உண்மையான வல்லமையாகிய அவர்களை எடுத்துக் கொள்ளப்படுதலில் மகிமையின் வீட்டிற்கு கொண்டு செல்வதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அப்பொழுது அது மிகவும் காலதாமதமானதாய் இருக்கும். அது அநேகருக்கு மிகவும் காலதாமதமானதாய் இருக்கும். 41உம்முடைய ஜனங்களுக்காக, 'அந்நாளிலே மிகாவேல் நிற்பான்“, அவன் தேசங்களுக்காக நிற்கப்போவதில்லை, ஆனால் உம்முடைய ஜனங்களுக்காக நிற்பான். 'பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் (நித்திய) நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஆனால் ஞானவான்களும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்களும் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமாய் பிரகாசிப்பார்கள்”. அல்லேலூயா‚ கூடாரமோ அல்லது குடிசையோ, நான் ஏன் கவலைக்கொள்ள வேண்டும்? ஏனெனில் அவர்கள் அங்கே எனக்காக ஒரு மாளிகையையே கட்டுகிறார்கள். என்றாவது ஒரு நாளில் நீங்கள் அங்கே வந்து என்னைக் காணலாம். 42அது என்ன? நான் வெளியே நடந்து சென்று, அந்த பெரிய விடிவெள்ளி நட்சத்திரம் அங்கே நகர துவங்கினதை நான் கவனித்தேன். விடிவெள்ளி நட்சத்திரம் எதை நமக்கு அறிவிக்கிறது? அது வருகின்ற சூரியனின் மேம்பட்ட வெளிச்சத்தை மட்டுமே பிரதிபலிக்கின்றதாய் இருக்கிறது. அது சரிதானே? அந்த விடிவெள்ளி நட்சத்திரம், அது ஏன் அவ்வளவு பிரகாசமாய் இருக்கிறது, அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் சூரியன் அதற்கு அவ்வளவு அருகாமையில் இருக்கிறது. அது முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. எனவே சூரியனின் வருகையை அந்த விடிவெள்ளி நட்சத்திரம் போற்றி வர வேற்கிறது. எனவே, விடிவெள்ளி நட்சத்திரங்களே, இதுதாமே அவருடைய வருகையை போற்றி வரவேற்க வேண்டிய நேரமாய் இருக்கிறது. பிரகாசியுங்கள், விடிவெள்ளி நட்சத்திரங்களே, அதிகாலமே எழும்புங்கள். அது குமாரன் மிக விரைவில் இங்கே இருப்பார் என்பதை தெரிவிக்கிறது. அங்கே வானத்தில் விடிவெள்ளி நட்சத்திரம் மின்னிக் கொண்டிருப்பதை நாம் கவனித்துப் பார்க்கும்போது, சூரியன் மிக விரைவில் பிரகாசிக்கப் போவதை அது தெரிவிக்கிறது அவ்விதமே தேவனுடைய விடிவெள்ளி நட்சத்திரங்கள் எழும்பி, இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் மகிமைக்காக பிரகாசிப்பதை பார்க்கும்போது, மேம்பட்ட ஒருவர் இருளை எதிர்த்து முன்னோக்கி வந்து கொண்டிருப்பதை காண்பிக்கிறது. எனவே வெளிச்சமெல்லாம் திரண்டு வரும்போது, விடிவெள்ளி நட்சத்திரமோ, 'கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள், சூரிய வெளிச்சம் வருவதற்கு அதிக நேரம் இல்லை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள், சூரிய வெளிச்சம் வருவதற்கு அதிக நேரம் இல்லை. சற்றே பொறுத்துக் கொண்டு இருங்கள்'', என்று சத்தமிடுகிறது. சகோதரி மர்பியும், மற்றவர்களும், 'பொறுத்துக் கொண்டு மட்டும் இருங்கள், சூரிய வெளிச்சம் வெகு விரைவில் வந்துவிடும்“, என்று பாடுவது வழக்கம். எனவே சூரிய வெளிச்சம் வருமட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உலகத்தில் விடிவெள்ளி நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டு, வானத்திலிருந்து இடியுடன் கூடிய மின்னலைப் போன்ற தேவனுடைய வருகைக்கும், காரிருளுக்கு முன்னும் இந்த உலகத்துக்கு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. 43இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவர் கூறினது... நான் அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தை கவனித்து, 'ஓ, அது விடிவெள்ளி நட்சத்திரம்'', என்று நான் நினைத்தேன். ஒரு நாளில் சகோதரன் உட்டும், நானும் அங்கே மேலே நின்றபடி நான் கீழே நோக்கிப் பார்த்தேன். அப்பொழுதுதான் அவர் நெருப்பை பற்றவைத்திருந்து நாங்கள் காலை உணவை சாப்பிட இருந்தோம். எனவே நான் திரும்பி, அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கண்டு, அங்கே இருந்த அந்த கேதுரு புதர்களிடையே நடந்து சென்றேன், அப்பொழுது காற்று, ஊசி இலை மரங்களினூடாக சலசலப்பு சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. நான் அங்கே நின்று கொண்டு, அந்த அருமையான தூய காலை காற்றின் சுவாசத்தை அருமையாக உணர்ந்து கொண்டிருந்தேன்; அங்கே உறைபனி, அதிகப்படியான உறைபனி சூழ்நிலை இருந்தது. நான் அங்கிருந்து ஓடைக்குச் சென்று, ஒரு வாளியில் தண்ணீரை எடுத்தேன், நீங்கள் அதை எடுத்துக் கொண்டு எழும்புவதற்குள் அது உறைந்துவிடும். அங்கேயிருந்த ஊசி இலை மரங்களினூடாக என் கரங்களை உயர்த்தியபடி நின்று கொண்டிருந்தேன். அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தை நான் கண்டு, ஓ, இங்கே கவனியுங்கள், இந்த நாற்பத்தி ஐந்து வருடங்கள், எனக்கு என்ன செய்திருக்கிறது என்று நான் எண்ணினேன். நான், ஓ, இங்கே கவனியுங்கள், தோல் சுருக்கமடைந்து, என்னுடைய கரங்களும் சுருக்கமடைந்து, தலைமுடி விழுந்து, பற்கள் விழுந்துபோய்விட்டது. ஓ, இந்த நாற்பத்தி ஐந்து வருடங்கள் இதைத்தான் எனக்கு செய்திருக்கிறது என்று கூறினேன். ஆனால், 'அங்கே கவனியுங்கள். அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தை, அதை தேவன் தன்னுடைய கரங்களிலிருந்து ஊதி, நீ பிரகாசித்துக் கொண்டிருப்பாயாக என்று கூறின அந்நாளில் அது எவ்வளவு அழகாகவும், பிரகாசமாகவும் இருந்ததோ அவ்விதமே அது இன்னும் இருக்கிறது“, என்றேன். 44பின்னர் இந்த வேதவசனத்தை நான் நினைவு கூர்ந்தேன். நான், 'ஆனால் தேவனோ நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதென்னவெனில் நாம் ஞானவான்களாயிருந்து, அநேகரை நீதிக்கு திருப்பும்போது, நட்சத்திரங்களை காட்டிலும் அதிகமாய் பிரகாசிப்பவர்களாய் என்றென்றைக்கும் இருப்போம்'', என்றேன். எனவே, விடிவெள்ளி நட்சத்திரமே, இப்பொழுது நீ பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய், ஆனால் நாங்கள் அங்கே வரும் வரைக்கும் நீ பொறுத்திரு என்று நான் எண்ணினேன். பின்னர் அந்த காற்றானது குன்றிலிருந்து கீழ்நோக்கி வந்து, ஊசி இலை மரங்களினூடாக சத்தமிட்டுக் கொண்டு (whistling) இப்படியாக கூறுவதை என்னால் கேட்க முடிந்தது, நதிக்கு அப்பால் ஒரு தேசம் இருக்கிறது, அதை நாம் என்றென்றைக்கும் இனிமையானது என்று அழைக்கிறோம், ஆனால் நாம் அக்கரையை விசுவாசத்தின் ஆணையினால் மட்டுமே சேரமுடியும்; ஒருவர் பின் ஒருவராக நாம் அந்த நுழைவாயிலை அடைந்து, அங்கே சாவாமையுள்ளவரோடு வாசம் செய்யும்படிக்காக, அந்த பொன்னாலான மணிகளை உனக்காகவும் எனக்காகவும் அடித்து ஒலி எழுப்புவார்கள். அது எவ்வளவு ஒரு பெரிய காரியம். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். 45எனவே அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணப் போகிறது. இந்த எளிய வயதான சாண் உடல் இங்கே எதற்காக இருக்கிறது? இந்த அற்ப வயதான பூமியின் தூசியும், முதுகெலும்பில்லாத புழுவாகிய அழிவுக்கேதுவான வயதான சரீரம், ஒழிந்துபோய், திரும்பவும் பூமியின் புழுதிக்கு திரும்ப, அதை தோல் புழுக்கள் தின்றுபோடும். ஓ, என்னே‚ எனக்குள் இருக்கும் எல்லாவற்றோடும் நான் எழும்பி, தேவனுடைய மகிமைக்காக பிரகாசிக்கட்டும். பரிசுத்த ஆவியானவர், சுவிசேஷ பிரசங்கத்தின் மூலமாக மற்றும் வியாதியஸ்தரை சுகப்படுத்துவதின் மூலமும் தன்னுடைய வல்லமைகளையும், மகிமையையும் அனுப்பி இயேசுகிறிஸ்து மரணத்திலிருந்து உயிரோடு எழும்பியிருக்கிறார் என்று நிரூபிக்கும்படிக்கு ஒவ்வொரு பாரத்தையும் தள்ளிப் போடுவோமாக. ஓ, என்னே, என்றென்றைக்கும் என்றென்றைக்குமாக. ஆனால் தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைப்பொருளாக வைத்து, இந்த புத்தகத்தை முத்திரைப் போடு, அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும்... பெருகிப்போம். அதன்பின் தானியேலாகிய நான் கவனித்தபோது, இதோ நதியின் கரையின் ஒரு பக்கத்தில் ஒருவனும், நதியின் கரையின் இன்னொரு பக்கத்தில் ஒருவனுமாக வேறே இருவர் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒருவன், தண்ணீர்கள் மேல் வீற்றிருந்த (பரிசுத்த ஆவி) சணல் நூல் வஸ்திரம் தரித்திருந்த ஒரு மனிதனை நோக்கி... கூறினான். (மக்கள் மற்றும் திரான ஜனங்கள், பரிசுத்த ஆவியானவர் மக்கள் மேல் இருப்பதைக் காண்பிக்கிறது) ஓ, அல்லேலூயா‚ பரிசுத்த ஆவி‚ வெளிப்படுத்தின சுவிசேஷம் 15:16ல் திரளான ஜனங்களும், கூட்டங்களும், தண்ணீர் 'திரளான மற்றும் ஜனங்களாகிய மக்களை குறிக்கிறது“, என்று கூறுகிறது. இங்கே வெள்ளை சணல்நூல் தரித்த ஒருவர் தண்ணீர்கள் மேல் நின்று தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, மேலும் கீழுமாக அசைவாட்டி, இந்த காரியங்கள் நிகழும்போது, இனிகாலம் செல்லாது என்று என்றென்றைக்கும் ஜீவிக்கிறவர் மேல் ஆணையிட்டு சொன்னான். அல்லேலூயா‚ இனிகாலம் செல்லாது. எனவே இந்த தேசங்கள் உடைந்து, இந்த காரியங்கள் நிகழும்போது தேவனுடைய இரகசியம் ஏற்கனவே நிறைவேறியிருக்கும் என்று ஆணையிட்டான். 46அது என்ன அது தேவனுடைய இரகசியம். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மூலம் தேவன் உனக்குள் இருந்து, மகிமையின் நம்பிக்கையாக பிரகாசித்து கொண்டிருப்பது. பின்னர் அவன், 'இந்த காரியங்கள் நிகழும்போது, இனிகாலம் செல்லாது“, என்றான். 'தங்கள் தேவனை அறிந்தவர்கள்...” தானியேல் கூறுகிறான். 'கடைசி நாட்களில் அநேகர் இங்கும், அங்கும் அலைந்து திரிவார்கள், அறிவும் பெருகிப்போம். ஆனால் தங்கள் தேவனை அறிந்தவர்கள் தீரச் செயல்களை செய்வார்கள்“. அவர்கள் தீரச் செயல்களை செய்வார்கள். ஓ, இன்று இரவில் விசுவாச தீரச் செயல்கள் மேலும், மேலும்; உலகம் எங்கிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெரிய கூட்டங்களும், குருடர் பார்வையடைவதும், செவிடர் கேட்பதும், முடவர்கள் நடப்பதும் தேசங்கள் எங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எல்லா தரப்பு மக்களும் உள்ளே வந்து கொண்டு; அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏழைகளும், தரித்திரர்கள் மட்டுமல்ல, ஆனால் கோடீஸ்வரர்களும் இன்னும் மற்ற யாவரும் கூட. தேவன் தன்னுடைய வஸ்திரத்தை எடுத்து, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் போட்டு, கலியாண விருந்துக்கு வரும்படிக்கு அவர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார். மெல்கிசேதேக்காகிய மகத்தான பிரதான ஆசாரியர் என்றோ ஒரு நாளில் வருவார்; அப்பொழுது அந்த மகத்தான, மகிமையான நாள் ஒன்றில் நாம் அவரோடு கூட புதிதாக கர்த்தருடைய போஜனத்தைப் புசிப்போம். ஓ, இன்றிரவு நான் அதற்கு அழைக்கப்பட்டதற்காக மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். ஆம், ஐயா. என்றோ ஒரு மகத்தான நாளில், என்றோ ஒரு ஆச்சரியமான நாளில், இனி காலம் செல்லாமற்போம். 47கவனியுங்கள், நாம் நித்தியத்திலிருந்து வந்திருக்கிறோம். உலகம் என்ற ஒன்று தோன்றுவதற்கு முன்னரே நாம் இருந்தோம். உங்களுக்கு அது தெரியுமா? தேவன் மனிதனை தன்னுடைய சாயலில் உருவாக்கினார். யோபு தனக்கு அதிக ஞானம் இருக்கிறது என்று நினைத்தபோது, அவர் யோபுவினிடத்தில், 'உலகத்திற்கு நான் அஸ்திபாரம் போட்டபோது... அதற்கு முன்னர் நீ எங்கே இருந்தாய்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய் பாடி, தேவ புத்திரர்கள் கெம்பீரித்தார்களே'', என்றார். விடியற்காலத்து நட்சத்திரங்கள் கெம்பீரித்தன. எனவே என்றோ ஒரு நாள் இராஜா மெல்கிசேதேக்கு இங்கே பூமியில் ஒரு கூடாரத்தை எடுத்துக் கொண்டு, தேவனுடைய நீதியில் வந்து, நம்மை தேவனுக்கு மறுபடியும் மீட்கும்படிக்கு தன் ஜீவனை கொடுப்பதையும், பின்னர் நாம் என்றென்றைக்குமாய் நட்சத்திரங்களை போல் பிரகாசிக்கப் போவதையும் அவர்கள் பார்த்தபோது, அந்த பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் சந்தோஷத்தில் ஏகமாய் கெம்பீரித்தன. 'நான் பூமியை அஸ்திபாரப்படுத்தினபோது நீ எங்கேயிருந்தாய்? அப்பொழுது நீ என்ன செய்து கொண்டிருந்தாய் எனக்கு அறிவி. மேலும் அது எதின் மேல் நிற்கிறது என்று எனக்குச் சொல்''. 'உன் இடையைக்கட்டிக் கொள். ஒரு புருஷனைப் போல் உன்னிடத்தில் நான் பேச விரும்புகிறேன்''. அப்பொழுது யோபு முகங்குப்புற மரித்தவனைப் போல் விழுந்தான். அவனால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியாமற் போயிற்று. ஏனெனில் தேவன் அங்கே இருந்தார். அதுதான் காரியம். 'நான் பூமிக்கு அஸ்திபாரம் போட்டபோது நீ எங்கே இருந்தாய்?“. 48இந்த மகிமையான சுவிசேஷம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு, காலங்களினூடாக கடந்துவந்து, இன்றிரவு இங்கே இருக்கிறது. இது தேவனால் நிரூபிக்கப்பட்டு, இந்த உலகத்தை அவள் சுற்றி வந்திருக்கிறாள். இதை அணைத்துப் போட வேண்டும் என்று அவர்கள் முயற்சித்தார்கள், ஆனால் காய்ந்துபோன மரங்கள் நிறைந்த காட்டை, காற்றடிக்கும் நாளில் அணைத்து போட முயற்சித்தது போல அது இருந்தது. ஆம், அதை உங்களால் அணைத்துபோட முடியாது. நீங்கள் எவ்வளவுக்கதிகமாக அதனிடத்தில் சண்டை போடுகிறீர்களோ, அவ்வளவுகதிகமாக அதற்கு காற்றை நீங்கள் வீசுகிறீர்கள், நீங்கள் அதற்கு அதிகமான காற்றை வீசச்செய்யும்போது, இன்னும் அதிகமாக அது எரியும். அந்த ஒரு காரியத்தை மட்டுமே உங்களால் அதற்கு செய்ய முடியும். அங்கே மலைகளில் நாங்கள் சிறிய அளவில் நெருப்பை உண்டாக்குவது வழக்கம். அதிகாலையிலேயே நாங்கள் நெருப்பை எரிய வைக்க முயற்சி செய்வது வழக்கம், அப்பொழுது நான் அங்கே சென்று, சில குச்சிகளை அதில் எறிவேன், அப்பொழுது அது புகைய ஆரம்பிக்கும். அதில் கொஞ்சம் புகை எழும்பும்போது, அதில் நெருப்பு எங்கேயோ இருக்கிறது என்று அவ்வளவு நிச்சயமாக அறிவேன். அப்பொழுது நான் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம், என்னுடைய தொப்பியை எடுத்து அதின் மேல் வீச வேண்டும். அப்பொழுது நிச்சயம் அது எரிய ஆரம்பித்துவிடும். அவ்விதமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன் மகிமையில் வரும்போது அவரை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, மறுபடியும் விசுவாசத்திற்கு திருப்பக்கூடிய பலமாய் விசிரும் காற்றாகிய, பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அதே பலமாக வீசுகிற காற்றே இன்றைக்கு சபைக்கு தேவையாயிருக்கிறது. 49அடையாளங்களையும், அற்புதங்களையும், புரியாத காரியங்கள் நிகழ்வதையும், அநேக இடங்களில் பூமி அதிர்ச்சிகளும், கடல் அலைகள் கரையை உடைத்துக்கொண்டு மீறுவதையும் கவனிக்கும்போது, இவையாவும் நடக்கும் என்று இயேசு கூறினவிதமாகவே இருக்கிறது. மனிதர்களுடைய இருதயம் சோர்ந்து போய், பயம், பயம் என்று இருக்கிறது. அது, 'ஓ, யார் முதல் கோபால்ட் அணுகுண்டை போடுவார்கள்? அடுத்து என்ன நடக்கும்?“ என்று இருக்கும். ஒரு சில மணிநேரங்களில் இந்த முழு உலகமும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். ஆனால் அது விமானத்திலிருந்து விழுவதற்கு முன்னமே நாம் தேவனுடைய சமூகத்தில் இருப்போம். அது உண்மை. அதற்கு பிறகு என்னவாகும்? அதற்கு பின் ஒன்றுமே இருக்காது. ஆனால் நாம் இந்த பழைய மாம்ச ஆடையை விட்டுவிட்டு, நாம் இதை விட்டுவிட்டு, எழும்பி, என்றென்றைக்குமாய் இருக்கிற பரிசை பிடித்துக்கொண்டு, 'விடைபெறுகிறோம், விடைபெறுகிறோம், இனிமையான ஜெப வேளை'' என்று கூச்சலிட்டபடி காற்றினூடாக கடந்து செல்வோம். இவையாவும் முடிவுக்கு வந்திருக்கும் போது, நாம் இந்த பழைய சரீரத்தை கீழே விட்டு, அதற்கு பதிலாக ஒழிந்துபோகாத கிரீடத்தையும் வஸ்திரத்தையும் அங்கே பெற்றுக் கொண்டு வீடு போய் சேர்ந்திருப்போம். மேலும் என்றென்றுமாய் ஜீவிக்கும்படிக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் மகிமையான வீதிகளில் மேலும் கீழுமாக நடக்கும்படிக்கு; நாம் வயோதிக மனிதன் மற்றும் வயோதிக பெண் என்பதிலிருந்து வாலிபத்துக்கு திரும்பி; சாவாமையில் எல்லாவற்றையும் விஞ்சி பிரகாசித்துக் கொண்டிருப்போம். அங்கே, 'உன்னதத்திலிருக்கும் தேவனுக்கு மகிமையுண்டாவதாக. நம் மத்தியில் பெரிய காரியங்களை செய்திருக்கிறார்'', என்று பாடுவோம். 50எனவே நாம் இன்றைக்கு தேவனுடைய வல்லமை ஒவ்வொன்றையும் எப்பக்கத்திலும் நிருபிக்கப்படுவதை பார்க்கும் பயணத்தில் இருக்கையில், நாம் நம்மை சுற்றி கவனித்து நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்க்கலாம். அத்திமரம் துளிர்விடுவதை கவனியுங்கள், மற்ற மரங்களும் துளிர்விடுவதை கவனியுங்கள், மற்ற தேசங்கள் துளிர் விடுவதைக் கவனியுங்கள், பரிசுத்த ஆவி சபை துளிர்விடுவதை கவனியுங்கள், பெந்தெகொஸ்தே அதே அடையாளங்களோடும், அற்புதங்களோடும் திரும்பி வந்து, மறுபடியும் நிகழ்வதை கவனிக்கவும். அல்லேலூயா‚ நாம் ஜெபம் செய்வோம். 51பரலோகப் பிதாவே, இன்று இரவு இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமைக்காகவும், அவருடைய மகத்தான உன்னதமான பிரசன்னத்திற்காகவும், அவருடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காகவும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். காரணம் நீர் இப்பொழுது இங்கே இருக்கிறீர், ஜீவிக்கிறீர், சதாகாலமும் ஜீவிக்கிறீர், மற்றும் எங்களுடைய அறிக்கையின்படி எங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறீர். கர்த்தாவே, எங்களை ஒரு நோக்கத்திற்காக எரியும்படிக்கு, பிணியிலிருந்து விடுவித்த உம்முடைய சுகமாக்கும் வல்லமைக்காக நாங்கள் உமக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், கல்லறையிலிருந்து எங்களை எடுத்து, உயிரோடு எழும்பச் செய்து, எங்களுடைய பெலனைப் புதுப்பித்து, நாங்கள் முன்சென்று, இங்கே இந்த இருளில் பிரகாசிக்கும்படிக்கு செய்கிறீர். பிதாவே, அதற்காக உமக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 52இரட்சிக்கப்படாமல் இருக்கும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதிக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். இரட்சிக்கப்பட்ட யாவரையும் ஆசீர்வதியும். எல்லா வியாதியஸ்தரையும் சுகப்படுத்தும். நீர் மகிமையை எடுத்துக்கொள்ளும். இந்த சிறிய கூடாரத்தை ஆசீர்வதியும். இந்த மக்களை ஆசீர்வதியும். மேய்ப்பரான, சகோதரன் நெவிலை ஆசீர்வதியும். எல்லா டீக்கன்மார்களையும், தர்மகர்த்தாக்களையும் ஆசீர்வதியும். அதை அளியும், கர்த்தாவே. இவர்கள் மேல் உம்முடைய சுகமாக்கும் கரங்களை வைத்திடும். ஒருவேளை பிசாசு உள்ளே வந்து, அவர்கள் மத்தியில் சிறிய வேறுபாட்டை ஏற்படுத்துவானாகில், உடனடியாக கீலேயாத்தின் பிசின் தைலத்தினால் அதை சுகமாக்கும், கர்த்தாவே. அவர்கள் மேல் அபிஷேக எண்ணெய்யை ஊற்றி, அவர்களை இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களாயும், ஆத்துமாவில் இனிமையுள்ளவர்களாக மாற்றும். அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பார்களாக. அவர்களுக்கு சரீரபிரகாரமாக காரியங்கள் நிகழ்ந்து, சுகவீனப்படுவார்களானால், கர்த்தருடைய தூதனானவர் அருகில் நின்று இயேசுவின் இரத்தத்தை பூசுவாராக. வியாதிப்பட்ட யாவரையும் சுகப்படுத்துவீராக. 53தூரத்திலிருக்கும் அவர்களுடைய பெரிதான தேவைகளைக் கண்டு, ஊழியங்களுக்கு துரிதமாய் புறப்பட்டு செல்லும்போது, அந்நாளில் எனக்கு என்ன தேவை என்பதை அறிந்து, எனக்கு உதவி செய்திடும், கர்த்தாவே. லட்சக்கணக்கானோர் மரித்துக் கொண்டிருக்கிறார்கள், மற்றும் தேவனை அறிந்திராத ஒரு லட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் இன்று கிறிஸ்துவை அறியாமல் மரித்து போனார்கள். எனக்கு உதவி செய்யும், அன்பான தேவனே. எங்கள் எல்லோரையும் ஆசீர்வதியும். மேலும் கிறிஸ்து இயேசுவில் அங்கே உன்னதங்களில் வீற்றிருக்கும் சிங்காசனத்தில் உம்மோடு கூட உட்காரும்படிக்கு எங்களை இந்த பூமியிலிருந்து என்றோ ஒரு நாளில் எழுப்பும். இதை அளியும், பிதாவே, அந்நேரம் வரைக்கும் எங்களுக்கு ஆரோக்கியத்தையும், பெலத்தையும் தந்தருளும். இதை இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். ஓ, நான் அவரை பார்க்க விரும்புகிறேன், அவருடைய முகத்தை நோக்கி பார்த்து, அங்கே அவருடைய இரட்சிப்பின் கிருபையை குறித்து சதாகாலமும் பாட விரும்புகிறேன்; அங்கே மகிமையின் வீதிகளில் என்னுடைய குரலை உயர்த்தி, கவலைகள் யாவும் கடந்துபோய், முடிவில் வீடு சேர்ந்து, என்றென்றைக்கும் களிகூர்வேன். இந்த தேசத்தினூடாக நான் பயணித்து, பாடிக் கொண்டு நான் செல்லும்போது, ஆத்துமாக்களுக்கு இரத்தம் ஒழுகும் கல்வாரியை சுட்டிக் காட்டுவேன், அநேக அம்புகள் என் ஆத்துமாவை உள்ளும், புறம்பும் ஊடுருவி சென்றாலும்; ஆனாலும் என் கர்த்தர் என்னை வழிநடத்த, நான் அவர் மூலமாய் நிச்சயம் வென்றிடுவேன். ஓ, நான் அவரை பார்க்க விரும்புகிறேன், அவருடைய முகத்தை நோக்கிப் பார்த்து, அங்கே அவருடைய இரட்சிப்பின் கிருபையை சதாகாலமும் பாட விரும்புகிறேன்; அங்கே மகிமையின் வீதிகளில் என்னுடைய குரலை உயர்த்தி, கவலைகள் கடந்தவனாய், முடிவில் வீடு சேர்ந்து, என்றென்றைக்கும் களிகூர்ந்துக் கொண்டிருப்பேன். 54இப்பொழுது, கொஞ்ச நேரத்திற்கு கவனியுங்கள். எத்தனை மெத்தொடிஸ்டுகள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். மெத்தொடிஸ்டுகள்? எத்தனை பாப்டிஸ்டுகள் இருக்கிறீர்கள் இங்கே? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எத்தனை பிரஸ்பிடேரியன்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எத்தனை நசரேயன்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எத்தனை பெந்தெகொஸ்தேகள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எத்தனை லூத்தரன்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நல்லது, நாமெல்லாரும் இங்கே இருக்கிறோம். கவனியுங்கள், ஒரு மாபெரும் பெரிய கூட்டமாக கலந்து, எல்லோரும் ஒரு இடத்தில் உன்னதங்களில் வீற்றிருந்து, ஆசீர்வாதத்தில் களிகூர்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது மெத்தொடிஸ்டுகள் பாப்டிஸ்டுகளுடனும், பாப்டிஸ்டுகள் லூத்தரன்களுடனும் கைகுலுக்க விரும்புகிறேன். உங்களுக்கு பின்னாக திரும்பி ஒருவருக்கொருவர் உங்கள் கரங்களை குலுக்கி மற்றும் இப்பொழுது இப்பாடலை நாம் பாடும்போது இவ்வளவு தூரத்திற்கு உங்கள் பின்னால் சென்று கைகுலுக்குங்கள். ஆத்துமாக்களுக்கு இரத்தம் ஒழுகும் கல்வாரியை சுட்டிக் காட்டுவேன், அநேக அம்புகள் என் ஆத்துமாவை உள்ளும் புறம்பும் ஊடுருவி சென்றாலும்; ஆனாலும் என் கர்த்தர் என்னை வழிநடத்த, நான் அவர் மூலமாய் நிச்சயம் வென்றிடுவேன். ஓ, அவரை நான் பார்க்க விரும்புகிறேன், அவருடைய முகத்தை நோக்கிப் பார்த்து, அங்கே அவருடைய இரட்சிப்பின் கிருபையை சதாகாலமும் பாட விரும்புகிறேன் அங்கே மகிமையின் வீதிகளில் என்னுடைய குரலை உயர்த்தி, கவலைகளை கடந்தவனாய், முடிவில் வீடு சேர்ந்து, என்றென்றைக்கும் களிகூர்ந்துக் கொண்டிருப்பேன். 55அது உங்களை நன்றாக உணரச் செய்யவில்லையா? அது உங்களை முற்றிலும்... போல உணரச் செய்யவில்லையா? எத்தனை கிறிஸ்தவர்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொரும், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஓ, என்னே‚ எவ்வளவு ஒரு அருமையான காரியம். இப்பொழுது நாம் பிரிந்து சென்று, அவரவர் வீட்டிற்கு நாம் செல்லும்போது, நாம் ஜெபத்துடன் செல்வோம். இப்பொழுது நாம் கலைந்து செல்வதற்கு முன் நம்முடைய அருமையான கடைசி பழைய பாடலை பாடலாம். எத்தனை பேருக்கு அது தெரியும்? 'இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு சொல்“. இப்பொழுது நாம் எல்லோரும் சேர்ந்து பாடுவோம். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், துயரமும், துக்கமும் உடைய பிள்ளையே; அது உனக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் கொடுக்கும், நீ போகிற எவ்விடத்திற்கும் கொண்டு செல். ஓ, எவ்வளவு இனிமையான, விலையேறப்பெற்ற நாமம்‚ பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; ஓ, எவ்வளவு இனிமையான, விலையேறப்பெற்ற நாமம்! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம். கவனிக்கவும். இயேசுவின் நாமத்திற்கு தலைவணங்கி, அவருடைய பாதத்தில் முகங்குப்புற விழுவோம், பரலோகத்தில் வீற்றிருக்கும் இராஜாதி இராஜாவிற்கு நாம் முடிசூட்டுவோம், நம்முடைய பிரயாணம் முடிந்தவுடன், ஓ, எவ்வளவு இனிமையான, விலையேறப்பெற்ற நாமம்‚ உலகின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; ஓ, எவ்வளவு இனிமையான, விலையேறப்பெற்ற நாமம்! இதோ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் விரும்புவது, இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் அதை கேடகமாக, உன்னைச் சுற்றி கவர்ச்சியூட்டும் சோதனைகள் வரும்போது, இந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் மெதுவாக உச்சரித்திடு. ஓ, எவ்வளவு இனிமையான, விலையேறப்பெற்ற நாமம்! உலகின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; ஓ, எவ்வளவு இனிமையான விலையேறப்பெற்ற நாமம்! உலகின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்.